“நானும் மாப்பிள்ளை ஆயிட்டேன்” – வைரலாகும் நாஞ்சில் விஜயன் திருமண வீடியோ!

நாஞ்சில் விஜயனுக்கு நேற்று காலை கோலாகலமாக திருமணம் நடைபெற்ற நிலையில், தாலி கட்டும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிரபல ரியாலிட்டி ஷோக்களான கலக்கப் போவது யாரு, சிரிச்சா போச்சு உள்ளிட்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நகைச்சுவையால் ரசிகர்களை சிரிக்க வைத்து பிரபலம் அடைந்தவர் நாஞ்சில் விஜயன். இவர் மரியா என்பவரை நேற்று திருமணம் செய்துக் கொண்டார். இவரது திருமணத்தில் சினிமா பிரபலங்கள் மற்றும் சின்னத்திரை பிரபலங்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர்.


இந்த நிலையில் இந்து முறைப்படி நடைபெற்ற இந்த திருமண விழாவில் மரியாவுக்கு நாஞ்சில் விஜயன் தாலி கட்டும் வீடியோவையும் திருமண புகைப்படங்களையும் நாஞ்சில் விஜயன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.
அந்த பதிவில்.

“Finally நானும் மாப்பிள்ளை ஆயிட்டேன் என்னுடைய திருமண நிச்சயத்திற்கு வாழ்த்திய வாழ்த்திக் கொண்டிருக்கின்ற இன்னும் வாழ்த்தப்போகிற அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் மேலும் எனக்கு தாய்க்கு தாயாக தந்தைக்கு தந்தையாக இருந்து உடனிருந்து நடத்தி வைத்த அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள்” என்றும் நாஞ்சில் விஜயன் நன்றி தெரிவித்துள்ளார்.

இதனை அடுத்து நாஞ்சில் விஜயனின் ரசிகர்கள் அவருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

https://www.instagram.com/reel/CwtzqjFpUcr/?utm_source=ig_web_copy_link

Total
0
Shares
Related Posts