அண்மையில் நடைபெற்ற விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் உதயநிதி மணமக்கள் அதிமுக போல் பிரியக்கூடாது; திமுக கூட்டணியை போன்று ஒற்றுமையாக வாழ வேண்டும் என தெரிவித்திருந்தார்.
உதயநிதியின் இந்த பேச்சுக்கு தற்போது பதிலடி கொடுத்துள்ள தமிழக பாஜக துணை தலைவர் நாராயணன் திருப்பதி கூறியதாவது :
வரலாறு முக்கியம் அமைச்சரே!!
தி மு க பிளவுபட்டு தான் எம்.ஜி. ஆர் அவர்களால் அ தி மு க உருவாகியது என்று தெரியாமல் பேசுவது முதிர்ச்சியின்மை!
தி மு க பிளவுபட்டு தான் வை.கோ. அவர்கள் ம.தி.மு.கவை உருவாக்கினார் என்பது தெரியாமல் பேசுவது அறியாமை!

ஒரு சீட்டுக்கு 5 கோடி பணம் கொடுத்து உருவாக்குவது கூட்டணியா? கூட்டணி கட்சியை உங்கள் கட்சியின் சின்னத்திலேயே போட்டியிட செய்வது ஒற்றுமையல்ல; அதிகார ஆணவம். பதவிக்காக, பணத்திற்காக, அதிகாரத்திற்காக, கூட இருந்தவர்களுக்கே குழி பறிப்பதற்கு பெயர் ஒற்றுமை அல்ல பொறாமை என தனது ட்விட்டர் பதிவில் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.