சனாதன தர்மத்தை அழிக்க எந்த கொம்பனும் பிறக்குவுமில்லை, பிறக்கப்போவதுமில்லை – நாராயணன் திருப்பதி

சனாதன தர்மத்தை அழிக்க எந்த கொம்பனும் பிறக்குவுமில்லை, பிறக்கப்போவதுமில்லை என தமிழக பாஜக துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறிருப்பதாவது :

ஓட்டுக்காக, அந்த ஓட்டு தரும் பதவிக்காக, அந்த பதவி தரும் பணத்திற்காக, அந்த பணம் தரும் சுகத்திற்காக, சனாதன தர்மத்தை, அதாவது ஹிந்து மதத்தை, அதாவது தாயின் மதத்தை கொச்சைப்படுத்தும் கேவலம் தமிழகத்தில் மட்டுமே அரங்கேறும் அவலம்.

மகன் செய்யும் அவதூறை நீர்த்து போக செய்ய, பெற்ற தாய் ஊர் ஊராக, கோவில் கோவிலாக பல்வேறு பிரார்த்தனைகளை செய்த வண்ணம் அலைந்து கொண்டிருக்க, ஹிந்து மத நம்பிக்கைகளை கேவலப்படுத்தும் மகனுக்கு இஸ்லாமிய,கிருஸ்துவ மத நம்பிக்கைகளை விமர்சனம் செய்ய தைரியமுள்ளதா? அல்லது பொது வெளியில் பெரும்பான்மை மக்களின் நம்பிக்கைகளை கொச்சைப்படுத்தும், கேள்வி கேட்கும் நபர் பெற்ற தாயின் நம்பிக்கையை கேள்வி கேட்கும் தைரியம் உள்ளதா? தன் தாயின் நம்பிக்கையையே அசைக்க முடியாதவர், கோடிக்கணக்கான ஹிந்து தாய்மார்களின் நம்பிக்கையை அசைத்து பார்க்க முடியுமா?

மத நம்பிக்கைகளின், மத குருமார்களின் உத்தரவின் படி வாக்களிக்கும் இஸ்லாமிய, கிருஸ்துவ மத சார்புள்ளவர்களின் வாக்குகளை கவர்ந்து, தேர்தலில் வெற்றி பெற மீண்டும் மதரீதியாக வாக்காளர்களை அணுகி ஏமாற்ற தயாராகிக் கொண்டிருக்கிறார்கள் மதவாத சிந்தனையுடைய அரசியல் கட்சியினர்.

சனாதன தர்மத்தை அழிக்க எந்த கொம்பனும் பிறக்குவுமில்லை, பிறக்கப்போவதுமில்லை என நாராயணன் திருப்பதி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Total
0
Shares
Related Posts