Site icon ITamilTv

super earth : பூமியை போல புதிய கிரகம் – நாசாவின் கண்டு பிடிப்பு!

super earth

super earth : பூமியை போல புதிய கிரகம் - நாசாவின் கண்டு பிடிப்பு!

Spread the love

பூமியைப் போன்று வாழ்வதற்கு ஏற்ற சூழல் கொண்ட ‘சூப்பர் எர்த்’ என்ற (super earth) புதிய கிரகத்தை நாசா வெண்வெளி நிறுவனம் கண்டு பிடித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா உயிர்கள் வாழக்கூடிய சூப்பர் எர்த் (super earth) என்ற கிரகத்தை கண்டு பிடித்துள்ளது.

சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள இந்த கிரகத்திற்கு TOI-715 b என பெயரிடப்பட்டுள்ளது.

பூமியை விட ஒன்றரை மடங்கு அகலம் கொண்ட இந்த கிரகம், சூரிய குடும்பத்திலிருந்து சுமார் 137 ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ளது.

இந்த கிரகம் சுற்றுவட்டப் பாதையில் தன் தாய் நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. 19 நாட்களிலேயே தனது முழு சுற்றுவட்டப் பாதையை சுற்றி வரும் இந்த கிரகத்தில் ஒரு ஆண்டு என்பது 19 நாட்கள் மட்டுமே.

இதன் மேற்பரப்பில் திரவ நீருக்கான அறிகுறிகள் இருப்பதாக நாசா தெரிவித்துள்ளது. திரவ நீர் இருப்பது உயிரினங்கள் வாழ உகந்த ஒன்றாக உள்ளது.

இது குறித்து நாசா செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் ‘சூப்பர்-எர்த்’ ஒரு சிறிய சிவப்பு நிற நட்சத்திரத்தைச் சுற்றி வருவதாகவும், அதற்கு அருகிலேயே பூமி அளவிலான மற்றொரு கிரகம் கூட இருக்கலாம்.

வானியல் அளவுகோலின்படி, ஒரளவுக்கு பூமிக்கு அருகிலேயே உள்ளது என்று சொல்லலாம் என நாசா கூறியுள்ளது.

“மேற்பரப்பில் நீர் இருக்க வேண்டுமானால், அதற்குப் பொருத்தமான வேறு பல வளிமண்டல காரணிகளும் இருக்க வேண்டும்.

இதுவரை செய்யப்பட்ட தோராய அளவீடுகள் மூலம், இந்தச் சிறிய கிரகம் பூமியைவிட சற்று பெரியதாக இருக்கலாம்” எனவும் நாசா தெரிவித்துள்ளது.

https://x.com/ITamilTVNews/status/1754369448843112811?s=20

இந்த கிரகம் சுற்றிவரும் சிவப்பு நட்சத்திரம் சூரியனை விட சிறியது மற்றும் குளிர்ச்சியானது.
இந்த கிரகங்கள் நமது சூரியக் குடும்பத்தில் உள்ள கிரகங்களை விட மிக நெருக்கமான சுற்றுப்பாதைகளைக் கொண்டுள்ளன.

இதையும் படிங்க : MNM: கூட்டணி குறித்து கமல் தான் அறிவிப்பார்- MNM துணைத் தலைவர்

ஆனால் அவை சுற்றி வரும் நட்சத்திரம் சிறியதாகவும், குளிர்ச்சியானவையாகவும் இருப்பதால் கிரகங்கள் நெருக்கமாக கூடியுள்ளன.

இவை நெருக்கமானவையாக இருந்தாலும் அவை உயிரினங்கள் வாழ பாதுகாப்பானதாக இருக்கும்” என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.


Spread the love
Exit mobile version