நாசாவின் ஆளில்லா விண்கலம் சுட்டெரிக்கும் சூரியனை நெருங்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
உலகில் இருக்கும் அதிதொழில்நுட்ப விண்வெளி ஆராய்ச்சி மையங்களில் ஒன்றாக வலம் வருவது அமெரிக்காவின் பெருமைமிக்க நாசா (NASA) . இதுவரை நாசா ஏராளமான வரலாற்று சிறப்பு மிக்க சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் தற்போது விண்வெளியில் பல புதிய கண்டுபிடிப்புகளை மேற்கொள்ள ஏராளமான செயற்கைகோள்களை விண்ணுக்கு அனுப்பி வருகிறது.
Also Read : விஸ்வரூபம் எடுக்கும் அண்ணா பல்கலை விவகாரம் – நாளை ஆய்வுக்கு வரும் தமிழக ஆளுநர்..!!
அந்தவகையில் நாசா அனுப்பிய PARKER SOLAR PROBE என்ற ஆளில்லா விண்கலம், சுட்டெரிக்கும் சூரியனுக்கு மிக அருகில் சென்று புதிய வரலாறு படைத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சூரியனின் மேற்பரப்பிலிருந்து 6.1 மில்லியன் கி.மீ தூரத்தைக் கடந்த பார்க்கர் விண்கலம் பாதுகாப்பாக இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது . நாளை காலை 10.30 மணியளவில் விண்கலத்திலிருந்து சிக்னல் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் நாசா தெரிவித்துள்ள்ளது.