ITamilTv

வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுப்பு – அமைச்சர் தங்கம் தென்னரசு

Spread the love

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில் நடைபெற்று வரும் வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து விளக்கமாக தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு கூறிருப்பதாவது :

வெம்பக்கோட்டை அகழாய்வில் நாயக்கர் கால செம்புக காசுக் கண்டெடுக்கப்பட்டுள்ளது . இந்த நாணயம் கி.
பி. 16ஆம் நூற்றாண்டைச் சார்ந்த மதுரை நாயக்க மன்னரான வீரப்ப நாயக்கர் காலத்தில் புழக்கத்தில் இருந்தது.

இக்காசின் முன் பக்கத்தில் சிவபெருமான் அமர்ந்த நிலையிலும் பின்பக்கத்தில் “ ஶ்ரீ வீர” என்ற தெலுங்கு எழுத்திலும் பொறிக்கப்பட்டுள்ளது. பரவலாகக் காணப்படும் இவ்வகைக் காசுகளில் பொதுவாக சிவபெருமானின் அருகே பார்வை தேவி அமர்ந்த நிலையில் காணப்படும். ஆனால், இக் காசில் சிவபெருமானின் திருவுரு மாத்திரமே காணப்படுகிறது.

இதேபோல் மாவுக் கல்லால் ஆன கழுத்தில் அணியக்கூடிய அணிகலனில் கீழே கோர்க்கப்படும் தொங்கணி கண்டறியப்பட்டுள்ளது. இத்தொங்கணி மாவுக் கல்லினால் செய்யப்பட்டுள்ளது. இதனின் தலைப்பகுதியில் அணிகலனுடன் கோர்ப்பதற்கான துளையிடப்பட்டுள்ளது.

14.6 மி.மீ நீளமும் 4.2 மி.மீ சுற்றளவும் 30 மில்லி கிராம் எடையும் கொண்ட பச்சை நிறத்தில் கூம்பு வடிவிலான சிறிய அணிகலன்.

இதையடுத்து சிவகங்கை மாவட்டம், கீழடியில் நடைபெற்று வரும் பத்தாம் கட்ட அகழாய்வில் உடைந்த செம்புப் பொருட்கள் கண்டறியப்பட்டுள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார் .


Spread the love
Exit mobile version