Nayanthara Vignesh Sivan Baby : நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் தற்போது இரட்டை குழந்தையை பெற்றெடுத்துள்ளனர்.இது குறித்து தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் மிகவும் சந்தோஷமான இந்த செய்தியை விக்னேஷ் சிவன் பதிவிட்டுள்ளார்.திருமணமாகி வெறும் நான்கு மாதங்களே ஆன நிலையில் இவர்களுக்கு எப்படி குழந்தை பிறந்திருக்க முடியும்?என்று பல கேள்விகள் எழும்பி வருகிறது.
Nayanthara Vignesh Sivan Baby
இந்நிலையில் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும் வாடகை தாய் முறையான சரகோசி முறையின் மூலம் குழந்தை பெற்றெடுக்க முடியும் என்று சமூக வலைதளங்களில் செய்தி பரவி வருகிறது.ஆனால்,இது குறித்து நயன்தாரா-விக்னேஷ்சிவன் தரப்பிலிருந்து எந்தவித அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை.இந்நிலையில் வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதில் என்னென்ன சட்டதிட்டங்கள் இருக்கின்றது என்று தற்போது தெரியவந்துள்ளது.
வாடகை தாய் மூலம் குழந்தை பெறுவதில் கீழ்க்கண்ட விதிமுறைகளை பின்பற்ற வேண்டும்.
1.வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் முடிந்திருக்க வேண்டும்
2.வாடகை தாய் மூலம் குழந்தை பெறுபவர்களில் தாய் தந்தை இருவரில் ஒருவர் குழந்தை பெறுவதற்கு தகுதியற்றவராக இருக்க வேண்டும்.
3.தம்பதிக்கும் வாடகை தாய்க்கும் கட்டாய தகுதி சான்றிதழ் இருந்திட வேண்டும்
4.வாடகை தாயாக குழந்தை பெற்று தரும் அந்தப் பெண் ஒரு முறை தான் வாடகை தாயாக இருக்க முடியும் .
5. குழந்தை பெற்றுக் கொள்பவர்களுக்கு நெருங்கிய உறவுகளாக இருப்பவர்கள் மட்டுமே வாடகை தாயாக இருக்க முடியும்.
6.வாடகை தாய்க்கு 16 மாத கால இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும்.
தற்போது நயன்தாரா விக்னேஷ் சிவன் இவர்கள் இருவரும் வாடகை தாய் மூலம் குழந்தை பெற்று இருப்பார்கள் என்றால் இந்த விதிமுறைகளை பின்பற்றி இருப்பார்களா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஒரு வேலை இவர்கள் இதை பின்பற்றவில்லை எனில் இவர்கள் கைதாகவும் வாய்ப்பு இருப்பதாக சட்ட வல்லுனர்கள் தெரிவிகின்றனர்!
Vignesh Sivan Nayanthara Baby Video
[embedyt] https://www.youtube.com/watch?v=Zb9jpr-A3zg[/embedyt]