பாரிஸ் ஒலிம்பிக் தொடரில் ஆடவருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா வெள்ளி பதக்கம் வென்றுள்ள நிலையில் அவருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரான்ஸ் நாட்டின் தலைநகரான பாரிஸில் நடப்பாண்டுக்கான ஒலிம்பிக் போட்டிகள் தொடங்கி சிறப்பாக நடைபெற்று வருகிறது . இதில் இன்று நடைபெற்ற ஆடுவருக்கான ஈட்டி எறிதல் இறுதி போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா 89.45 மீட்டர் தூரம் வீசி வெள்ளி பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்.
2020 ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்றதை தொடர்ந்து பாரிஸ் ஒலிம்பிக்ஸில் 2வது பதக்கம் வென்று இந்திய வீரர் நீரஜ் சோப்ரா சாதனை படைத்துள்ளார் . பாரிஸ் ஒலிம்பிக்ஸில் இந்தியாவுக்கு இது 5வது பதக்கமாகும்.
இந்நிலையில் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஒலிம்பிக் தொடரில் பதக்கம் வென்றுள்ள நீரஜ் சோப்ராவிற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறிருப்பதாவது :
நீரஜ் சோப்ரா ஒரு சிறந்த ஆளுமை; அவர் மீண்டும் பதக்கம் வென்றிருப்பதன் மூலம் இந்த நாடு பெருமை கொள்கிறது.
எண்ணற்ற விளையாட்டு வீரர்களின் கனவுகளை நனவாக்கி நமது தேசத்தை பெருமைப்படுத்த அவர் தொடர்ந்து ஊக்குவிப்பார் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.