நீட் தேர்வுக்கான பதிவு இன்று தொடங்குகிறது..!

Spread the love

மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம், NBEMS, NEET MDS படிப்புக்கான பதிவு ஜனவரி 4 ஆம் தேதி(இன்று) முதல் தொடங்கும் என அறிவித்துள்ளது. நீட் மற்றும் MDS தேர்வுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் NBE இன் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

nbe.edu.in என்ற இணையதளத்தின் மூலம் இன்று மாலை 3 மணி முதல் நீட் தேர்வுக்கான பதிவு என தெரிவிக்கப்பட்டுள்ளது.விண்ணப்பதாரர்கள் ஜனவரி 24 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என தெரிவித்துள்ள தேர்வு வாரியம்,

பொதுப்பிரிவு மற்றும் ஓபிசி விண்ணப்பத்தாரர்கள், தேர்வு கட்டணமாக 4425 ரூபாய் செலுத்தவேண்டும் எனவும், எஸ்,எடி உள்ளிட்ட பிரிவு மாணவர்கள் 3245 ரூபாய் தேர்வு கட்டணமாக செலுத்தவேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.

மேலும், தேர்வு மார்ச் 6 ஆம் தேதி நடைபெறும் என்றும், அதன் முடிவு மார்ச் 21 ஆம் தேதிக்குள் வாரியத்தால் அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள பல்வேறு தேர்வு மையங்களில் கணினி அடிப்படையில், தேர்வு நடைபெறும் என தேசிய மருத்துவ அறிவியல் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது.

 


Spread the love
Related Posts