மருத்துவ படிப்புகளில் சேர்வதற்கான நீட் தேர்வு நாடு முழுவதும் இன்று 557 நகரங்களில் ( NEET Exam ) நடைபெற உள்ளது.
இன்று பிற்பகல் 2 மணி முதல் மாலை 5.20 மணி வரை நடைபெற இருக்கும் இந்த தேர்வை சுமார் 24 லட்சம் பேர் தேர்வு எழுதுவதற்கு பதிவு செய்துள்ளனர் . தமிழ்நாட்டில் 12,730 அரசுப்பள்ளி மாணவர்கள் உட்பட 1.52 லட்சம் பேர் நீட் தேர்வு எழுத உள்ளனர்
மேலும் இந்த தேர்வை எழுத மாணவர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன :
தேர்வு தொடங்குவதற்கு குறிப்பிட்ட நேரத்துக்கு முன்னரே மாணவர்கள் தேர்வு மையத்துக்கு வர வேண்டும் என்றும் தேர்வு கூடத்தின் கதவு பூட்டப்பட்டப் பிறகு ஒருவரும் உள்ளே அனுமதிக்கப்படமாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Also Read : தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியாகிறது..!!
முதல் ஒரு மணி நேரம் மற்றும் கடைசி அரை மணி நேரம் மாணவர்கள் கழிவறைக்கு செல்ல அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும், கழிவறைக்கு சென்று வருவோர் அனைவரிடமும் மீண்டும் முழு பரிசோதனை நடத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுமட்டுமின்றி வழக்கம்போல ஆடை கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளன. ஜீன்ஸ் பேண்ட் அணியக் கூடாது என்றும், உலோகங்கள் அடங்கிய உள் ஆடைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
மாணவிகள் குர்தி, லெக்கிங்ஸ், palazzos அணியவும் தடை செய்யப்பட்டுள்ளது. ஷூ அணியவும், ( NEET Exam ) மூக்குத்தி, கம்மல், செயின் உள்ளிட்ட ஆபரணங்கள் அணியவும் மாணவிகள் தலை முடியை இறுக்கி பின்னவும் தடை விதித்துள்ளது.