ITamilTv

என் பொண்ணா இருந்தால் செருப்பாலேயே அடிப்பேன்! ஜிபி முத்தை.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்…

Spread the love

பிக்பாஸ் (bigg boss) போட்டியாளரான ஜிபி முத்து, ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாகப் பேசியுள்ள காட்சி சமூக வலைத்தளங்களில் பேசு பொருளாக மாறி உள்ளது.

பிக்பாஸ் (bigg boss) நிகழ்ச்சி தொடங்கிய முதல் நாளிலிருந்து அதிகமான ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் என்றால் அது ஜிபி முத்து தான்.

நாளுக்கு நாள் ரசிகர்களிடையே இவருக்கான ஆதரவு பெருகி வந்த நிலையில், நேற்று நடைபெற்ற சம்பவத்துக்குப் பின், நெட்டிசன்கள் மத்தியில் கடும் எதிர்ப்பை சம்பாதித்துள்ளார் ஜிபி முத்து.

bigg boss

நேற்று நள்ளிரவு அசல் கோலார் தன்னை உருவகேலி செய்ததைத் தைரியமாக எதிர்த்து நின்று தட்டிக்கேட்டதால் அசல் மற்றும் தனலட்சுமி இருவருக்கும் இடையே சண்டை நடைபெற்றது.

இந்த சண்டையை முடிவுக்குக் கொண்டு வர அசீம், தனலட்சுமியை வீட்டுக்கு வெளியே அழைத்துச் சென்றார்.

அப்போது அங்கு வந்த விக்ரமன் தனலட்சுமியிடம் என்ன பிரச்சனை.. ஏன் அழுகுற எனக் கேட்டார். ஆனால் அசீம், தனலட்சுமியை விக்ரமனுடன் பேசவிடாமல் வெளியே அழைத்துச் சென்றார்.

இதனால், கோபமடைந்த விக்ரமன் அசீம் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர்,

இவர்களுக்கு இடையே வந்த ஜிபி முத்துவும், நீங்க அதைப்பற்றி எல்லாம் பேசக்கூடாது எனச் சொல்லி விக்ரமனை சமாதானப்படுத்த முயன்றார்.

தன்னை பேச விடாமல் தடுத்த ஜிபி முத்தின் மீது கோபமடைந்த விக்ரமன், ‘நீங்க என் ஊர்க்காரர் என்பதால் உங்கள் மேல நிறைய மரியாதை வைத்திருந்தேன்.. என்ன நீங்க தடுக்காதீர்கள்.

நான் பேசுவதற்குக் கூட இந்த வீட்டில் உரிமை இல்லையா ’ என ஜிபி முத்துவிடம் கேட்டார்.

அதற்கு ஜிபி முத்து, பிரச்சனை பெரிதாகி விடக்கூடாது என்பதால் தான் உங்களைத் தடுத்தேன் எனக்கூறி, தனலட்சுமி அசலிடம் எகிறியது தவறு எனக் கூறினார்.

 

மேலும், ஒரு பொம்பள புள்ள எகிறினால் ஒரு ஆணுக்குக் கோபம் வரத்தான் செய்யும் என்றும், பெண்கள் ஆண்களிடம் பணிவாகத் தான் நடந்து கொள்ள வேண்டும் எனவும் ஆணாதிக்கத்தை வெளிப்படுத்தும் விதமாக ஜிபி முத்து பேசியது அனைவரிடமும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அப்படிப் பேசியதோடு நில்லாமல், கடந்த வாரம் தனலட்சுமிக்கும், தனக்கும் இடையே நடந்த சண்டையைப் பற்றியும் பேசிய ஜிபி முத்து, தான் மன்னிப்பு கேட்டும் தனலட்சுமி தன்னை மன்னிக்கவில்லை என்று கூறினார்.

மேலும், இன்னும் ஒருபடி மேலே சென்று ஆத்திரத்தில் இதுவே எனது மகளாக இருந்திருந்தால் செருப்பாலேயே அடித்திருப்பேன்… என்று கூறினார்.

இவ்வாறு ஆத்திரத்தில் பேசிய ஜிபி முத்துவிடம் இதெல்லாம் தப்பு, உங்கள் பொண்ணா இருந்தாலும் செருப்பால அடிக்கக்கூடாது என விக்ரமன் கூறியபோதிலும்,

இதையெல்லாம் ஏற்றுக்கொள்ளும் மனப்பான்மையில் இல்லாத ஜிபி முத்து தொடர்ந்து ஆணாதிக்க தொனியிலேயே பேசிக்கொண்டிருந்தார்.

ஜி.பி முத்து ஆத்திரத்தில் பேசிய இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருள் ஆகி உள்ளது.

இதனால், ஜிபி முத்துவுக்கு ரெட் கார்டு கொடுக்க வேண்டும் என நெட்டிசன்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

பிக்பாஸ் மூன்றாவது சீசனில் பெண்களை உரசுவதற்காகவே பேருந்தில் செல்வேன் எனச் சொன்னதற்காகச் சரவணனுக்கு ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பியது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version