கனடாவை அமெரிக்காவுடன் இணைய வலியுறுத்தி அந்நாட்டின் 47 ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கபட்டுள்ள டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார்.
அமெரிக்காவில் கடந்த சில நாட்களுக்கு முன் நடைபெற்ற அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட கமலா ஹாரிஸை வீழ்த்தி குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்ட் ட்ரம்ப் அபார வெற்றி பெற்றார்.
இதன்முலம் அமெரிக்காவின் 47 ஆவது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் விரைவில் பொறுப்பேற்க்க உள்ள நிலையில் அதிபராக பதவி ஏற்கும் முன்பே பல முக்கிய முக்கிய முடிவுகளை டிரம்ப் எடுத்து வருகிறார் .
அதன் ஒரு பகுதியாக அமெரிக்காவிற்கும் சட்டவிரோதமாக குடிபெயர்ந்தவர்களை அவர்கள் நாட்டிற்கே திரும்பி அனுப்பும் முடிவில் டிரம்ப் உறுதியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவின் நட்பு நாடான் கனடாவை தங்களுடன் இணையும்படி டிரம்ப் சூசகமாக தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 51வது மாகாணமாக கனடா இணைய வேண்டும் என ட்ரம்ப் விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் அவ்வாறு இணைந்தால் பொதுமக்களின் வரி 50%-க்கும் மேல் குறையும், தொழில்கள் இருமடங்கு பெருகும், சக்திவாய்ந்த ராணுவ பாதுகாப்பு கிடைக்கும் என தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில் டிரம்ப் வெளியிட்டுள்ள கிறிஸ்துமஸ் வாழ்த்துச் செய்தியில், கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடுவை ‘கவர்னர்’ என குறிப்பிட்டு டிரம்ப் பதிவிட்டிருந்தது தற்போது பேச்சு பொருளாக வலம் வருகிறது.