பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களை 24 மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும் என புதிய விதி அமல் படுத்தப்பட்டுள்ளது.
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு கடும் தண்டனை விதிக்க வகை செய்யும் சட்ட திருத்த மசோதாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்தார்.
இதில் பெண்களுக்கு எதிராக நடக்கும் பாலியல் வன்கொடுமைகளுக்கு கொடுக்கப்படும் தண்டனை குறித்த விவரங்களை முதல்வர் ஸ்டாலின் வாசித்தார்.
இதையடுத்து மேலும் உரையாற்றிய முதல்வர் ஸ்டாலின் கூறியதாவது :
பாலியல் வன்கொடுமை தொடர்பான புகார்களை 24 மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் நிறுவனங்கள் தெரிவிக்க வேண்டும்.
Also Read : பெண்களுக்கு எதிரான குற்றங்களை தடுக்கும் சட்ட முன்முடிவு – என்னென்ன திருத்தம்?
கல்வி நிலையங்கள், தொழில் நிறுவனங்களில் பெண்கள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கப்பட்டால் நிர்வாகம் 24 மணி நேரத்தில் புகார் அளிக்க வேண்டும்
•24 மணி நேரத்திற்குள் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்றால் நிறுவனங்களுக்கு ரூ.2 லட்சம் வரை அபராதம்.
நிறுவனங்கள், கல்வி நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தவில்லை என்றால் ரூ.2 லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.