சென்னையில் வளர்ப்பு மற்றும் தெரு நாய்களால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு வரும் நிலையில் வளர்ப்பு நாய் வைத்திருப்பவர்களுக்கான புதிய விதிமுறைகளை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
அதன்படி நாய் வளர்ப்பவர்கள் தங்களது நாய்களை சாலையில் அழைத்துச் செல்லும் போது, நாய்களுக்கு வாய் மூடி கட்டாயம் அணிந்திருக்க வேண்டும்.
கட்டாயம் உரிமம் பெற்றிருக்க வேண்டும், அதேபோல் ரேபிஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும், வளர்ப்பு நாய்கள் கடித்தால் அதன் உரிமையாளரே பொறுப்பு இது போன்ற பல விதிமுறைகளை கடந்த ஆண்டு சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவித்திருந்தது .
Also Read : திரையில் ஜொலித்ததா ஜீவாவின் அகத்தியா..!!
என்னதான் மாநகராட்சி சார்பில் விதிமுறைகள் போடப்பட்டாலும் வளர்ப்பு நாய்களின் உரிமையாளர்கள் என்னவோ விதிமுறைகளை பின்பற்றாமல் அஜாக்கிரதையாக இருந்து வருவதாக புகார்கள் எழுந்து வந்தது.
இந்நிலையில் விதிமுறைகளை கடுமையாக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளது. அதன்படி வளர்ப்பு நாய்களை பொது வெளியில் அழைத்து வரும் உரிமையாளர்கள் தங்களது நாய்களுக்கு கட்டாயம் வாய்மூடி அணிந்து வர வேண்டும், இல்லையெனில் 1000 ரூபாய்க்கு மேல் அபராதம் விதிக்க மாநகராட்சி முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.