தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது .
விழுப்புரம் நங்கிளி கொண்டான், தி.மலை கரியமங்கலம், கிருஷ்ணகிரி நாகம்பட்டியில் சுங்கச் சாவடிகள் திறக்கப்பட உள்ளது .
கரியமங்கலம் சுங்கச்சாவடியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.55 முதல் ரூ.370 வரையும் நங்கிளி கொண்டான், நாகம்பட்டியில் ஒரு முறை சென்று வர கட்டணமாக ரூ.60 முதல் ரூ.400 வரையும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் 1,228 சுங்கச்சாவடிகள் உள்ள நிலையில், இதில் 339 சுங்கச்சாவடிகள் தமிழகத்தில் அமைந்துள்ளன. இந்நிலையில், கடந்த ஏப்ரல் 1 ஆம் தேதி, சுங்கச்சாவடி கட்டணம் மாற்றி அமைக்கப்படும் என தகவல் வெளியாகி இருந்தது .
Also Read : எல்லை தாண்டி மீன் பிடித்த தமிழக மீனவர்களுக்கு அபராதம் விதித்த இலங்கை நீதிமன்றம்..!!
இதையடுத்து நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் நடைபெற்று வந்த நிலையில் சுங்கச்சாவடி கட்டண உயர்வு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் முதல் சுங்கச்சாவடி கட்டணம் மாற்றம் அமலுக்கு வந்துள்ளது .
தமிழகத்தில் மணகெதி, கல்லக்குடி, வல்லம், தென்னமாதேவி உள்பட 36 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமலுக்கு வந்த நிலையில் தற்போது மேலும் தமிழகத்தில் 3 இடங்களில் புதிய சுங்கச்சாவடிகளை திறப்பதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது வாகன ஓட்டிகள் மத்தியில் சற்று பீதியை கிளப்பியுள்ளது.