புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது அரசின் கட்டுப்பாடுகளை மீறி செயல்பட்ட கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Also Read : கடன் கொடுத்து காதலை வளர்த்த காதலி – நன்றி மறந்த ஆசை காதலன் கைது..!!
இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்தியில் கூறிருப்பதாவது :
வருகின்ற புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குடித்துவிட்டு வாகனம் ஓட்டினாலோ பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் இருசக்கர வாகன சாகசத்தில் ஈடுபட்டாலோ அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டாலோ அவர்கள் மீது வழக்கு பதிந்து வாகனம் பறிமுதல் செய்யப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் IPS எச்சரிக்கை விடுத்துள்ளார்.