வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் ‘குலாப்’ புயலாக மாறி கடந்த 26 ஞாயிற்றுக்கிழமை ஆந்திராவில் கரையை கடந்தது.
இந்த குலாப் புயல் தெலுங்கானா, மகாராஷ்டிரா முழுவதும் நகர்ந்து. நேற்று தெற்கு குஜராத் மீது மையம் கொண்டிருந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நாளை காலைக்குள் வட அரபிக்கடலில் புயலாக உருவெடுக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதிதாக உருவெடுக்க இருக்கும் ஷாகீன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த புயல் பாகிஸ்தான் நோக்கி செல்லக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் காரணமாக கடல் கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் இந்தியா மற்றும் அதனை சுற்றியுள்ள நாடுகளின் மீனவர்கள் 2 நாட்களுக்கு கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.