இசைஞானி இளையராஜாவை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் நேரில் சந்தித்து பேசியதாக இணையத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அன்பில்மகேஷ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
தமிழர்களின் பெருமை அய்யா இசைஞானி அவர்களை அன்பின் நிமித்தமாக சந்தித்தோம்.
பெண் கல்வியையும், பெண் உரிமையையும் வலியுறுத்தும் விதமாக @tnschoolsedu ஆல் ‘பெண்-கல்வி, உரிமைகள், விடுதலை’ எனும் தலைப்பில் விழிப்புணர்வு பாடல் தயாரிக்கப்பட்டது.
அப்பாடல் உருவாக்கத்தில் சகோதரி பவதாரிணி அவர்களின் இசை பங்களிப்புக் குறித்து நன்றியோடு எடுத்துரைத்தோம்.
அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்.
இவ்வாறு அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.
அன்போடு வரவேற்று இசையோடு எங்களை வழியனுப்பி வைத்தார்.
சமீபகாலமாக இளையராஜா, வைரமுத்து தொடர்பான சர்ச்சை பரபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இதில் இளையராஜா பா.ஜ.கவைச் சேர்ந்தவர், வைரமுத்து திமுகவைச் சேர்ந்தவர் என்று அரசியலும் பேசப்படுகிறது.
இந்த நிலையில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் அன்பில் மகேஷ், இளையராஜாவை சந்தித்திருப்பது, திமுக தலைமையின் அனுமதியுடன் தான் என்று கூறப்படுகிறது.
இளையராஜா, வைரமுத்து பிரச்சனை கட்சிரீதியாக பேசப்படும் நிலையில், இதில் எவ்வித அரசியலும் இல்லை என்பதை உணர்த்துவதற்காக அமைச்சர் அன்பில் மகேஷ் சந்தித்திருப்பதாகவும் கூறப்படுகிறது