கடந்த 3 ஆண்டுகால திமுக ஆட்சியும் மக்கள் சந்தித்த இன்னல்களும் என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை பட்டியல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.
3 ஆண்டுக்கே மூச்சு முட்டுதே என்று தலைப்பிட்டுள்ள அந்த பட்டியலில் குறிப்பிட்டுள்ளது வருமாறு;-
- வேங்கை வயல் தொட்டியில் மனித மலம் கலப்பு
- அன்றாடம் மக்கள் பயன்படுத்தும் ஆவின்பாலில் கொழுப்பை குறைத்து விலையை அதிகப்படுத்தியது திமுக அரசு
- தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கம்
4.கோவை குண்டுவெடிப்பு சதியை மூடிமறைக்கப் பார்த்தது திமுக அரசு
5.BGR ஊழல் - பொங்கல் பரிசு தொகுப்பு ஊழல்
- தலித் சிறுமியை வன்கொடுமை செய்த திமுக எம்.எல்.ஏ குடும்பம்
- சென்னை மழைநீர் வடிகால் அமைப்பதில் 4,000 கோடி முறைகேடு
9.தமிழகத்தில் Lock -up மரணங்கள் அதிகரித்து வருகிறது - பெண் காவல் அதிகாரியை பாலியல் வன்கொடுமை செய்த திமுகவினர்
- சென்னை மழைநீர் வடிகால் அமைக்க ஒதுக்கப்பட்ட ரூ.4,000 கோடி என்ன ஆனது என்றே தெரியவில்லை
- திமுக ஆட்சிக்கு வந்தது முதல் பட்டியல் சமூக மக்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளது
- ரூ.1,343,170,000,000 மதிப்பிலான திமுகவினரின் சொத்துகுவிப்புகள் DMK Files மூலம் தெரிய வந்தது
- ரூ.2,000 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை கடத்தியவர்களுக்கு பதவி வழங்கினார்கள்
- தங்கள் உரிமைக்காக போராடிய விவசாயிகளை குண்டர்சட்டத்தில் கைது செய்தார்கள்
- மின்சாரம் & PEAK HOUR கட்டணத்தை உயர்த்தி தொழிற்துறையை அழித்து, சாமானியர்களை இன்னலுக்கு உள்ளாக்கினார்கள்
- கொடுத்த வாக்குறுதியில் 90% நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றி வருகிறது திமுக
- ஒரே குடும்பம் ஒரே ஆண்டில் ரூ.30,000 கோடி!
இவ்வாறு அந்த பட்டியலில் தெரிவித்துள்ளார்