கடக ராசி
நட்சத்திரம்:புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)
கிரகநிலை:
சுக ஸ்தானத்தில்- கேது
ரணருணரோக ஸ்தானத்தில் -சூரியன்
புதன்(வ) – சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன்
சனி – பாக்கிய ஸ்தானத்தில் குரு
தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில்- ராகு
லாப ஸ்தானத்தில்- செவ்வாய்
கிரக மாற்றங்கள்:
- 29-03-2023 அன்று அஷ்டம ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சி நடைபெறுகிறது
- 22-04-2023 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
- 08-10-2023 அன்று ராகு பகவான் பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்
8-10-2023 அன்று கேது பகவான் தைரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
கடக ராசி பொது பலன்கள்:
- உங்களுக்கு இந்த ஆண்டு குடும்ப சுபிட்சம், மக்கள் நலம், தாம்பத்திய உறவு எல்லாமே நலமாக இருக்கும். உங்களுடைய அந்தஸ்தும் சிறப்பாக இருக்கத் தடை இருக்காது.
- உங்கள் முயற்சிகளை எப்போதும் நேர்வழியில் செலுத்துங்கள்
- குடும்ப நலம் சீராக இருக்கும். மனக்கிலேசம், உடல் நலம் பாதிப்பு, பண விரயம் போன்ற சங்கடங்கள் ஓர் ஏற்படும்.
- தெய்வப்பணி, தருமப்பணி போன்ற நற்காரியங்கள் நலம் தரும்.
- உத்தியோகஸ்தர்களுக்கு ஏதேனும் ஒரு குறை உண்டாகலாம்.
- முன்விரோதம் காரணமாக சிக்கல் ஏற்படலாம்.
- வியாபாரிகளுக்கு சிறிதளவு பாதிப்பு ஏற்படலாம்.
- காவல், ராணுவம் போன்ற துறைகளில் உள்ளோர் மிக்க பொறுப்புடன் பணியாற்றி நற்பெயரைக் காத்துக் கொள்வது அவசியம்.
அரசியல்துறை :
- அரசியல்வாதிகள் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரத் தூண்டப்படுவார்கள்.
- எந்த ஒரு செயலிலும் நிதானம் தேவை.
- எந்த பிரச்சினையையும் குறுக்கு வழியில் தீர்த்துக் கொள்ள முயற்சி செய்யாதீர்கள்.
- நேர் வழியே நலம் பயக்கும். பொருளாதார நிலையைப் பொறுத்தமட்டில் வரவும் உண்டு; செலவும் உண்டு.
கலைத்துறை:
- கலைத்துறையினருக்கு நன்மை தீமைகள் கலந்தவாறு நடக்க இடமுண்டு.
- பொதுவாக பொருளாதார சங்கடம் உருவாகாது.
- அதிகப்படியான செலவு உண்டாகலாம்.
டெக்னீஷியன்களுக்கு கவுரவம் கிடைப்பதுடன் பணவரவு உண்டாகவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கான பலன்கள்:
- பெண்களுக்கு குடும்ப நலம் அளவோடு இருக்கும். தாம்பத்தியம் மகிழ்ச்சியுடன் விளங்கும்.
- சிறு தொல்லைகள் இருந்தாலும் மன தைரியத்தால் அவை அனைத்தையும் வென்றுவிடுவீர்கள்.
- மாணவர்கள் பொறியியல்துறை, மருத்துவத் துறையில் உள்ளோருக்குப் புகழ் பெற சந்தர்ப்பமுண்டு.
- உங்கள் வாழ்வில் உன்னத நிலை அடைவதற்குத் தேவையான அடிப்படை இந்த காலகட்டத்தில் அமையும்.