கன்னி ராசி
நட்சத்திரங்கள்:
உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள்
கிரகநிலை :
- தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் -கேது
- சுக ஸ்தானத்தில் -சூரியன், புதன்(வ)
- பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் -சுக்கிரன், சனி
- சப்தம ஸ்தானத்தில்- குரு
- அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் -ராகு
- பாக்கிய ஸ்தானத்தில் -செவ்வாய் (வ)
கிரக மாற்றங்கள்:
- 29-03-2023 அன்று ரண ருண ரோக ஸ்தானத்திற்கு சனி பகவான் பெயர்ச்சியாகிறார்
- 22-04-2023 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்திற்கு பெயர்ச்சி ஆகிறார்
- 08-10-2023 அன்று ராகு பகவான் சப்தம ஸ்தானத்திற்கு மாறுகிறார்
- 08-10-2023 அன்று கேது பகவான் ராசிக்கு மாறுகிறார்.
பலன்கள்:
- புதனை ராசிநாதனாகக் கொண்ட உங்களுக்கு இந்த ஆண்டு பலவிதமான
- சங்கடங்கள் வந்தாலும் மனோதிடத்துடன் அணுகி வெற்றி காண்பீர்கள்.
- மனச்சங்கடங்களைச் சமாளித்து விடுவீர்கள். என்றாலும், பெரியோர்களின் நல்லாசியை விரும்பிப் பெறுங்கள்.
- குடும்ப நலம், தாம்பத்திய வாழ்க்கை சீராக இருக்கும்.
- உங்களுக்கு ஏற்படும் பல கஷ்டங்கள் பலமிழந்து போக வாய்ப்புண்டு.
- உடல் நலனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.
- கணவன் – மனைவி உறவு கெட இடமில்லை.
- துன்பங்களைச் சமாளிக்கும் ஆற்றலைப் பெறுவீர்கள்.
- உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய உத்தரவு கிடைக்க வாய்ப்புண்டு.
- வியாபாரிகளுக்கு நல்ல லாபம் வருவதற்கான அமைப்பு உண்டு. நல்லோர்
- நேசமும், சாதுக்களின் தரிசனமும் கிடைக்கும். விவசாயிகளுக்கு மகிழ்ச்சி உண்டு.
- நில புலன்களில் எந்த விதமான வில்லங்கமும் உருவாக இடமில்லை.
கலைத்துறை:
- கலைத்துறையில் மகிழ்ச்சி உண்டு.
- கொடுக்கல் – வாங் கலில் நிதானம் இருக்கட்டும்.
- அரசியல்வாதிகள் ஒரு குறிப்பிட்ட பிரச்சினையில் சமத்காரமாக நடந்து கொண்டு நற்பெயர் பெற வாய்ப்புண்டு.
- பொதுவாக கெடுதல்கள் ஏற்படுமானாலும், அந்தக் கெடுதல்கள் அவ்வளவாக பாதிக்காது.
- ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற பலனை பெறவும் வாய்ப்புண்டு.
பெண்களுக்கான பலன்கள்:
- பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். குடும்ப சுபிட்சம், தாம்பத்திய
- உறவு சீராக இருக்கும். சுப காரியங்கள் நடக்க இடமுண்டு. குறிப்பாக திருமணம் நடக்கும்.
- மக்கட்பேறு உண்டாகவும் இடமுண்டு. பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. மாணவர்கள் ஏற்றம் பெறுவர்.
- உடல் நலம் நல்லவிதமாக இருக்கும்.
- மனதில் சலனம் ஏற்படலாம். தேவையில்லாத எண்ணங்கள் தோன்றலாம். நிதானத்தைக் கடைப் பிடியுங்கள்.
நட்சத்திர பலன்கள்:
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்:
- இந்த ஆண்டு அலுவலர்கள் விரும்பத்தகாத உத்தரவுகள் பெற இடமுண்டு. குறிப்பாக இடமாற்றம் ஏற்படலாம்.
- அரசியல்வாதிகள் அவசரப்பட்டால் அவப்பெயரையே சம்பாதிக்க நேரும்.
- அரசு விரோதத்தைச் சம்பாதிக்காம் இருப்பதில் கவனமாய் இருங்கள்.
- தீமைகளைத் தோற்றுவிப்பதில் உங்களைச் சுற்றி உள்ளவர்கள் முனைந்து நிற்பார்கள், கவனம் தேவை.
அஸ்தம்:
- இந்த ஆண்டு வியாபாரிகள் லாபம் காண்பர். விவசாயிகளுக்குச் சிறு சோதனை உண்டாகலாம்.
- நன்மைகள் சற்றுத் தூக்கலாக நடக்கும். அரசு அலுவலர்களுக்குப் பிரச்சினை உருவாக இட மில்லை.
- வியாபாரிகளுக்கு அளவான லாபம் உண்டு. வேதம் அறிந்த விற்பனர்கள் போற்றப்படுவார்கள். எனினும் உஷார் தேவை.
- கலைத்துறையில் உள்ளவர்களுக்கு அன்றாடப் பணிகள் தட்டுத் தடுமாறி நடக்கும்.
சித்திரை 1, 2 பாதங்கள்:
- இந்த ஆண்டு வியாபாரிகள் மிகுந்த அலைச்சல்பட்டே சிறிதளவு லாபம் காண்பர்.
- பயணத்தைத் தவிர்ப்பது நல்லது. கலைத்துறையில் பாதிப்பு உண்டாகாது. நன்மைகள் உண்டாக குரு அருள்வார்.
- மாணவர் – ஆசிரியர் உறவு நல்லிணக்கம் பெறும். விவசாயிகள் எச்சரிக்கையுடன் இருப்பது அவசியம். கலைத்துறை சுறுசுறுப்படையும்.
- குடும்பத்தில் சுமுகம் நிலவும். சுபகாரியம் ஒன்று நடக்கலாம். நன்மைகளும்,
- தீமைகளும் கலந்தவாறு நடக்கவே செய்யும்.
பரிகாரம்: புதன்கிழமை தோறும் அருகிலிருக்கும் ஐயப்பன் அல்லது சாஸ்தான் கோவிலுக்குச் சென்று நெய் தீபம் ஏற்றி வரவும்.
அதிர்ஷ்ட திசைகள்: மேற்கு, தெற்கு