நடிகை ரகுல் ப்ரீத் சிங்க்கு சமீபத்தில் திருமணம் ஆன நிலையில் அவரது கணவர் பெரும் கடனில் சிக்கி சொத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தென்னிந்திய திரையுலகில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரகுல் பிரீத் சிங். இவர் கன்னட திரைப்படம்
கில்லி என்ற மூலம் திரையுலகில் அறிமுகமானார். இந்த திரைப்படம் தமிழில் இயக்குனர் செல்வராகவனின் 7 ஜி ரெயின்போ காலனியின் ரீமிக்ஸ் திரைப்படமாகும்.
இதனையடுத்து தமிழில் தடையறை தாக்க மூலம் அறிமுகமான ரகுல் பின் சிங்கருக்கு போதியளவில் வரவேற்பு கிடைக்கவில்லை.
இதனை அடுத்து என்னமோ ஏதோ , தேவ் ,என் ஜி கே உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தாலும் கூட தீரன் அதிகாரம் ஒன்று என்று படத்தின் மூலம் நடிகை கார்த்திகா ஜோடியாக நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார்,
தொடர்ந்து ஹிந்தி தெலுங்கு, போன்ற மொழிகளில் நடித்து வந்த ரகுல் ப்ரீத் சிங் ரசிகர்களின் கவனத்தைப் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து பல வெற்றி படங்களில் நடித்து முன்னாடி நடிகையாக வந்த ரகுல் ப்ரீத் சிங் , சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த அயலான் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவோ நல்ல வரவேற்பு பெற்றது.
திரைத்துறையில் வெற்றி நடை பயணம் போட்டுக் கொண்டிருந்த ரகுல் ப்ரீத் சிங் கடந்த பிப்ரவரி மாதம் தன்னுடைய நீண்ட நாள் காதலரான ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்டார்.
மேலும் ரகுலின் மாமனார் யார் தெரியுமா?அவர்தான் பிரபல பாலிவுட்டின் தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டைன்மென்ட் நிறுவர் ஆவர் . அந்த நிறுவனத்தை ரகுல் ப்ரீத் சிங் கணவர் ஜாக்கி பக்னானியும் கவனித்து வந்தார்.
இந்த சூழலில் மிகப்பெரிய பட தயாரிப்பு நிறுவனர் , திருமணம் வெளிநாட்டில் சுற்றுலா என மகிழ்ச்சியில் இருந்த ரகுல் பிரீத் சிங்கின் வாழ்க்கையில் தற்பொழுது மிகப் பெரிய புயல் ஒன்று தாக்கியுள்ளது.
ஜாக்கி பக்னானி யின் தயாரிப்பு நிறுவனமான பூஜா என்டர்டைன்மென்ட், ” சமீபத்தில் டைகர் ஷெராப், அமிதாபச்சன் நடித்த கணபத், அக்ஷய் குமார் நடித்த பர்த்டே மியான் சோட்டா பீம் ஆகிய படங்கள் வசூல் ரீதியாக தோல்வி அடைந்தது.
கிட்டதட்ட 250 கோடி ரூபாய் வரை இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் மும்பையில் உள்ள தங்களுக்கு சொந்தமான 7 மாடி கட்டிடத்தை விற்கும் நிலைக்கு தள்ளப்பட்டதாக கூறப்பட்டது.
ஆனால் அந்த கட்டிடத்தை நாங்கள் விற்க போது இல்லை என்றும் அங்கு ஆடம்பகு குடியிருப்புகளை கட்டப் போவதாக வாசு பக்னானி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.