1947ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ஆம் தேதி ஆங்கிலேயர் ஆட்சியிலிருந்து நமது நாடு விடுதலை பெற்றது.இந்த நாள் ஒவ்வொரு இந்தியனின் இதயத்திலும் தனி இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நாளில், டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டு பிரதமர் நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார் மற்றும் ராணுவ அணிவகுப்பு நாடு முழுவதும் ஒளிபரப்பப்படும்.
இந்த நிலையில்,ஆகஸ்ட் 15ம் தேதி இந்தியா முழுவதும் சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டது. 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடும் விதமாக 13ம் தேதியிலிருந்து 15ம் தேதி வரை மூன்று நாட்களில் அனைவரது வீடுகளிலும் தேசியக் கொடி ஏற்றிக் கொண்டாடுமாறு பிரதமர் வேண்டுகோள் விடுத்திருந்தார். அதன்படி நாடு முழுவதும் பல்வேறு வீடுகளில் தேசியக்கொடியானது ஏற்றப்பட்டு இருந்தது.
கோவை சுந்தராபுரம் மாச்சம்பாளையம் பகுதியில் தேசியக் கொடியின் கீழ் கிறிஸ்தவ மத வார்த்தை பயன்படுத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கோவை சுந்தராபுரம் பகுதி மாச்சம்பாளையத்தில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியக்கொடி தேசியக் கொடியின் கீழ் “இயேசுவே என் இந்தியாவை ஆசீர்வதியும்” என்ற வாசகமும் எழுதப்பட்டு தேசியக் கொடியானது பறக்கவிடப்பட்டு இருந்தது. இது குறித்து அப்பகுதி மக்கள் சிலர் காணொளி எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டதைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் குனியமுத்தூர் காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
15ம் தேதி மாலை அனைவரும் தேசியக் கொடியை இறக்கிய நிலையில் மாச்சம்பாளையத்தில் சண்முகம் என்பவரது வீட்டில் தேசியக்கொடி இறக்கப்படாமல் பறக்கவிட்டபடி இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.மேலும் இது குறித்து வழக்குப் பதிவு செய்த காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்