Site icon ITamilTv

இந்த படம் தான்.. வாரிசு கதையா..? வெளியான அதிர்ச்சி தகவல்!!

Spread the love

விஜய், ராஷ்மிகா மந்தனா, சரத்குமார், ஜெயசுதா, பிரகாஷ் ராஜ், ஸ்ரீகாந்த், ஷாம், யோகி பாபு, குஷ்பு சிறப்பு தோற்றத்தில் வரும் எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த வாரிசு திரைப்படம் எப்படி இருக்கிறது என்பதை விரிவாக இங்கே பார்ப்போம் வாங்க..

ஜகதல பிரதாபன் கதை என ஒரு ராஜாவின் கதை இருக்கிறது. அதைத்தான் மாடர்ன் உலகிற்கு ஏற்றவாறு இயக்குநர் வம்சி வாரிசு(vaarisu) படமாக மாற்றி உள்ளார். தொழிலதிபரான சரத்குமார் தனக்கு அடுத்து தனது சிம்மாசனத்தில் அமரப் போகும் வாரிசு யார் என்பதை முடிவு செய்ய மூன்று மகன்களுக்கு இடையே போட்டி வைக்க முயல்கிறார்.

ஆனால், அது பிடிக்காமல் குடும்பத்தை விட்டு பிரிந்து செல்லும் விஜய் மீண்டும் குடும்பத்திற்குள் வந்து அங்கே உள்ள பிரச்சனைகளை எப்படி களைந்தார் என்பது தான் வாரிசு படத்தின் கதை

அப்பாவின் அரியாசனத்திற்கு ஆசைப்படாத மகனாக வீட்டை விட்டு புறப்பட்டு செல்லும் விஜய் அம்மா ஜெயசுதாவின் பாசத்திற்கு கட்டுப்பட்டு சரத்குமார் – ஜெயசுதாவின் 60வது திருமண விழாவுக்காக மீண்டும் வீட்டுக்கு 7 ஆண்டுகள் கழித்து வருகிறார். அதன் பிறகு வீட்டில் ஒரு பெரிய பிரச்சனை வெடிக்கிறது. அங்கே இருந்து படம் ஆரம்பம் ஆகிறது

வாரிசு படத்தின் ட்ரெய்லரில் பிரகாஷ் ராஜ் தான் வில்லனாக காட்டப்பட்ட நிலையில், குடும்பத்தில் இருக்கும் அண்ணன்களான ஸ்ரீகாந்த் மற்றும் ஷாம் இருவரும் விஜய் மீண்டும் வந்த நிலையில் எப்படி பொறாமை காரணமாக வில்லன்கள் ஆகின்றனர் என்றும் அவர்களை சமாளித்து திருத்துகிறாரா? அல்லது துவம்சம் செய்கிறாரா விஜய் என்பது தான் வாரிசு படத்தின் கிளைமேக்ஸ்.

விக்ரமன் படத்தை இயக்குநர் ஷங்கர் எடுத்தால் எப்படி இருக்குமோ அந்த அளவுக்கு பிரம்மாண்ட விஷுவல்ஸ் உடன் இயக்குநர் வம்சி தமிழ் சினிமா ரசிகர்களுக்கான படமாகவே வாரிசு படத்தை இயக்கி உள்ளார். ஆக்‌ஷன், காமெடி, ஆட்டம் பாட்டம், சென்டிமென்ட் என பக்கா பேக்கேஜ் ஆக இந்த படம் உருவாகி உள்ளது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக் பழனியின் கேமரா ஒர்க் நிச்சயம் ரசிகர்களை தியேட்டரில் ஆச்சர்யப்படுத்துகிறது. தமன் இசையில் ரஞ்சிதமே மற்றும் தீ தளபதி ஆகிய இரு பாடல்களும் தியேட்டர் மெட்டீரியல். ஓவர் எமோஷனலாக இல்லாமல் தேவையான எமோஷனல் வைத்த நிலையில் படம் தப்பித்தது

பல இடங்களில் படத்தையும் படத்தின் கதாபாத்திரங்களையும் காட்சிகளின் வழியே கலாய்த்து இருப்பது ஒரு இடத்துக்கு மேல் எரிச்சலை ஊட்டுகிறது. செகண்ட் ஹாஃப் செல்லும் வேகத்திற்கு இணையாக முதல் பாதி இன்னமும் மெருகேற்றப்பட்டிருந்தால் மேலும், சிறப்பாக இருந்திருக்கும்.

மொத்தத்தில் இந்த பொங்கல் பண்டிகையை ஜாலியாக சொந்தங்களுடன் கொண்டாடும் படமாக சில குறைகளுடன் உருவாகி இருக்கிறது விஜய்யின் வாரிசு திரைப்படம்.


Spread the love
Exit mobile version