லத்தூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பூமிக்கடியில் மர்மமான ஒலிகளைக் கேட்பதால் , கிராமம் முழுவதும் அச்சம் அடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மராட்டிய மாநிலம் லத்தூர் மாவட்டத்தில் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது ஹசோரி கிராமம்.கடந்த செப்டம்பர் 6 ந்தேதி முதல் இந்த கிராமத்தில் பூமிக்கு அடியில் இருந்து மர்ம சப்தங்கள் கேட்கின்றன.
இதனால் கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர். இதை தொடர்ந்து மாவட்ட அதிகாரிகள் இந்திய புவி காந்தவியல் நிறுவனத்தின் நிபுணர்களை கிராமத்திற்குச் சென்று ஆய்வு செய்யுமாறு கோரிக்கை வைத்து உள்ளனர்.
மேலும் லத்தூர் மாவட்ட கலெக்டர் பிருத்விராஜ் நேற்று இந்த கிராமத்திற்கு சென்று மக்கள் பீதியடைய வேண்டாம் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்.இதனைத் தொடர்ந்து ,இந்த ஹசோரி கிராமம் கில்லாரியில் இருந்து 28 கி.மீ தொலைவில் உள்ளது.
1993 ஆம் ஆண்டில் ஒரு பயங்கரமான நிலநடுக்கம் 9,700 க்கும் அதிகமான உயிர்களைக் கொன்ற இடம். ஆனால் அப்பகுதியில் இருந்து எந்த நில அதிர்வு நடவடிக்கையும் பதிவு செய்யப்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இருப்பினும் செப்டம்பர் 6 முதல் நிலத்தடியில் உரத்த மர்ம ஒலிகள் கேட்கப்படுகின்றன என்று தெரிவித்த அடுத்து கிராம மக்கள் அச்சமும் குழப்பமும் அடைந்துள்ளனர்.
மேலும் ஒரு கிராமத்தில் பூமிக்கடியில் மர்மமான ஒலிகளைக் கேட்பதால் , கிராமம் முழுவதும் அச்சம் அடைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.