நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவையின் முதல் கூட்டம் இன்று தொடங்குகிறது. இதில் புதிய எம்.பி.க்கள் பதவியேற்க உள்ளனர்.
- நாடு முழுவதும் 18-வது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 3-வது முறையாக ஆட்சியைப் பிடித்து கடந்த 9-ம் தேதி, நாட்டின் பிரதமராக மோடி 3-வது முறையாக பதவியேற்றுக் கொண்டார்.
- அவருடன் அவருடன் இணை அமைச்சர்கள் -36 , கேபினட் அமைச்சர்கள் -30 , தனி பொறுப்பு -5 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
- இதையடுத்து, புதிய மக்களவையின் முதல் கூட்டம் 24-ம் தேதி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.
- இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மக்களவையின் தற்காலிக தலைவராக பாஜக எம்.பி. பர்த்ருஹரி மஹதாப் நியமிக்கப்பட்டார்.
- இதனையடுத்து முதல் முறையாக 18-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் இன்று தொடங்குகிறது. இதில் ,தற்காலிக மக்களவைத் தலைவர் பர்த்ருஹரி மஹதாப்புக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
- காலை 11 மணிக்கு மக்களவை கூடியதும், பிரதமர் மோடி மற்றும் அமைச்சர்களுக்கு தற்காலிக மக்களவைத் தலைவர் மஹதாப் பதவிப் பிரமாணம் செய்து வைக்க உள்ளார்.
- இதையடுத்து, மற்ற உறுப்பினர்கள் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார்கள். இன்று மொத்தம் 280 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர். நாளை மீதமுள்ள 263 உறுப்பினர்கள் பதவியேற்றுக் கொள்கின்றனர்.
- இதைத் தொடர்ந்து 26-ம் தேதி மக்களவைத் தலைவர் தேர்தல் நடைபெறும். 27-ம் தேதி இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு உரையாற்ற உள்ளார்.