ITamilTv

குவைத் மன்னர் செய்க் நவாப் அல் அகமது காலமானார்..!!

Spread the love

குவைத் மன்னர்(kuwaits emir) செய்க் நவாப் அல் அகமது அல் சபா உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் காலமான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.அவருக்கு வயது 86.

ஐ.நா. சபையில் உறுப்பினராக இருக்கும் 191 நாடுகளில் 28 நாடுகள் இன்னமும் மன்னராட்சியில்தான் உள்ளன.அந்த வகையில் குவைத் மன்னராக செய்க் நவாப் அல் அகமது அல் சபா கடந்த 2020ம் ஆண்டு செப்டம்பரில் குவைத் மன்னராக பொறுப்பேற்றார்.

மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபா வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இதனால் அவரால் தொடர்ந்து பணியாற்ற முடியாத நிலை ஏற்பட்டது. அப்போது செய்க் நவாப் தனது முக்கிய பொறுப்புகளை 2021ம் ஆண்டு பட்டத்து இளவரசர் செய்க் மெஷல் அல் அகமது அல் சபாவிடம் ஒப்படைத்தார்.

இந்த நிலையில் கடந்த மாதம் மன்னர் செய்க் நவாப் அல் அகமது அல் சபாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்தனர்.ஆனால் துரதிர்ஷ்டவசமாக இன்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.


Spread the love
Exit mobile version