திமுக சட்டமன்ற உறுப்பினரும் திமுக நிர்வாகியுமான இளைஞர் வெட்டிக்கொல்லப்பட்ட சம்பவம் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கின் நிலை குறித்து அச்சம் கொள்ள செய்திருக்கிறது.
தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் வட்டம் நெய்குண்ணம் பகுதியைச் சேர்ந்தவர் கலைவாணன் (30). இவர் ஜெயங்கொண்டம் திமுக எம்.எல்.ஏ கண்ணனின் சகோதரியின் மகனாவார். விவசாயம் செய்து வந்த கலைவாணன், நிதி நிறுவனமும் நடத்தி வந்துள்ளார்.
திமுகவிலும் இளைஞரணி துணை அமைப்பாளராக பதவி வகித்துவந்தார்.
ஞாயிற்றுக்கிழமை இரவு இருமூலை பகுதியில் உள்ள வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்ற கலைவாணன், நேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர்.
அங்கு அவர் ரத்த வெள்ளத்தில் முகம் சிதைந்த நிலையில் சடலமாகக் கிடந்துள்ளார்.
இதுகுறித்து பந்தநல்லூர் காவல்நிலையத்துக்கு தெரிவித்த தகவலின் பேரில் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். சடலத்தைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணையும் மேற்கொண்டுள்ளனர்.
கலைவாணன் தண்ணீர் பாய்ச்ச வருவதை அறிந்து அவருக்குப் பிடிக்காதவர்கள் அல்லது தொழில்முறை விரோதிகள்தான் அவரை கொலை செய்திருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
திமுக எம்.எல்.ஏவின் உறவினரும், திமுக நிர்வாகியுமான கலைவாணன் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்தப் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படிங்க: சர்ச்சையை கிளப்பிய ஐதராபாத் பாஜக வேட்பாளர் மாதவி லதா!