ஒத்தக்கடை அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவிகளை பத்திரமாக பேருந்தில் ஏற்றி வழியனுப்பும் பாட்டி செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த பாண்டியம்மாள் பாட்டி யார் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம் .
தமிழகத்தில் முழுவதும் 1ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்கள், அரசு கலை, அறிவியல் கல்லூரி மாணவர்கள், அரசு பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்களுக்கு போக்குவரத்து கழகங்கள் சார்பில் இலவச பஸ் பாஸ் வழங்கி உள்ளது.
இதன் மூலம் பள்ளி மாணவர்கள் முதல் பாலிடெக்னிக், ஐ.டி.ஐ.யில் படிக்கும் மாணவர்கள் வரை பயன்படுத்தி பயனடைந்து வருகின்றனர்.
அவ்வப்போது மாணவர்கள் பேருந்துகளில் தொடர்ந்து கூட்ட நெரிசல் சிக்கி விபத்துகள் ஏற்பட்டுள்ளனர். மேலும் சாகசம் என்ற பெயரில் பள்ளி மாணவர்கள் பேருந்தின் படிக்கட்டுகளில் தொங்கியபடி சென்று விபத்துக்களில் சிக்கி வருகின்றனர்.
இதையும் படிங்க: ”இனி கள்ளச்சாராயம் விற்றால்..”முதல்வர் கொண்டு வந்த அதிரடி சட்டம்!
அந்த வகையில்,கடந்த ஆண்டு சென்னை கெருகம்பாக்கம் பகுதியில் சென்ற மாநகர அரசுப் பேருந்தில் படியில் தொங்கியபடி, மாணவர்கள் சிலர் பயணித்தனர்.
அப்போது அந்த வழியாக தனது வாகனத்தில் வந்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு நிர்வாகி நடிகை ரஞ்சனா நாச்சியார் பேருந்தை தடுத்துநிறுத்தி படியில் தொங்கியபடி பயணம் செய்த மாணவர்களை இறக்கிவிட்டதோடு மட்டுமல்லாது,
அங்கு படியில் இருந்த மாணவர்களை இறங்க சொல்லி ஓட்டுநர், நடத்துநருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்ட நடிகை ரஞ்சனா நாச்சியார் ஈடுபட்ட சம்பவம் வைரலானது.
இந்த சூழலில் ஒத்தக்கடை அரசு மாதிரி பள்ளியில் பயிலும் மாணவிகளை பத்திரமாக பேருந்தில் ஏற்றி வழியனுப்பும் பாட்டி பாண்டியம்மாள் செய்து வருகிறார்.
மதுரை மாவட்டம் ஒத்தக்கடை அரசு மாதிரி பள்ளி செயல்பட்டு வருகிறது. அங்கு ஒப்பந்த பணியாளராக பாண்டியம்மாள் பாட்டி பணிபுரிந்து வருகிறார்.
மாலை நேரத்தில் பள்ளி விடும் போது மாணவிகளை கையில் கம்பை வைத்துக்கொண்டு படியில் நிற்காமல் உள்ளே செல்லுமாறு அறிவுறுத்தியும், பாய் சொல்லியும் அன்பை காட்டி வருகிறார். தற்பொழுது இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.