பிரிவினைவாதத்தை தூண்டும் வகையில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ள நரேந்திரமோடி பிரசாரம் செய்வதற்கு தடைவிதிக்க வேண்டும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் தேர்தல் ஆணையத்தைல் வலியுறுத்தி உள்ளார்.
சென்னை, சத்தியமூர்த்தி பவனில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தொகுதியில் இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட வெற்றி வேட்பாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை ஆலோசனை நடத்தினார்.
பின்னர் செல்வப் பெருந்தகை செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
முதல் கட்ட தேர்தல் முடிந்து 2ஆம் கட்ட தேர்தல் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறுகிறது.
முதல் கட்ட தேர்தலில் ஒரு தொகுதிகூட வெற்றி கிடைக்காது என்று கருதிய பாஜகவும், நரேந்திரமோடியும் இரண்டாம் கட்ட தேர்தலில் இந்தியா முழுவதும் விஷமத்தனத்தை விதைத்து வருகிறார்கள்.
ஆர்.எஸ்.எஸ்.சுடைய சித்தாந்தத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டுமென்று துடித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த மண்ணிலே அது முடியாது என்பது அவர்களுக்கும் தெரியும்.
2 நாட்களுக்கு முன்பு மத ரீதியிலான பிளவு ஏற்படுத்தவும், கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்வதற்கும் நரேந்திரமோடி முயல்வது அப்பட்டமாக இந்திய மக்களுக்கு தெரிய வந்திருக்கிறது.
ஏற்கனவே பின்புலமாக இருந்த ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தை ஆங்காங்கே விதைத்துக் கொண்டு வந்த நரேந்திரமோடி, இப்போது நேரடியாக இஸ்லாமிய மக்களுக்கு எதிராகவும், இந்துக்களுக்கு எதிராகவும் பிரச்சனையை கையில் எடுத்திருக்கிறார். இதனை தமிழக காங்கிரஸ் கமிட்டி வன்மையாக கண்டிக்கிறது.
இதையும் படிங்க: மணல் கொள்ளை விவகாரம்: ED முன்பு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
இந்த பேச்சின் அடிப்படையில் இந்திய தேர்தல் ஆணையம், நரேந்திரமோடியை எங்கும் பிரசாரம் செய்ய அனுமதிக்கக்கூடாது.
யாராவது இந்திய அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிராகப் பிரசாரம் செய்தால், தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடுகளை மீறினால், எப்படி தடை விதிக்கிறார்களோ, அதே போன்று நரேந்திரமோடி அவர்களுக்கு தேர்தல் ஆணையம் தடைவிதிக்க வேண்டும்.
நரேந்திரமோடி மதக்கலவரத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். இந்த தேசத்தை பிளவு படுத்த முயற்சி செய்கிறார்.
காங்கிரஸின் தேர்தல் அறிக்கைகள் இந்த தேச மக்களின் நலனுக்காகத்தான் அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதை திரித்து உண்மைக்குப் புறம்பாகக் கூறி மக்களை திசை திருப்பும் முயற்சியில் இறங்கி நரேந்திரமோடி மிகப்பெரிய படுதோல்வியை சந்தித்து இருக்கிறார்.
இந்துக்கள் எல்லாம் இவரை நம்புவது போலவும், இந்துக்கள் எல்லாம் இவர் பின்னால் இருப்பது போலவும் மாயையை ஏற்படுத்துகிறார். ஆனால் ஒருபோதும் இந்துமக்கள் தேசவிரோத சக்திகளை அனுமதிக்க மாட்டார்கள்.
இந்த தேசம் பன்முகத்தன்மை கொண்ட தேசம். எல்லா மொழிவாரி மாநிலங்களும் இங்கு உள்ளது. எல்லா கலாச்சாரமும் இருக்கிறது. ஒவ்வொரு மாநிலங்களுக்கும் கலாச்சார வேறுபாடுகள் இருக்கின்றன.
இதையும் படிங்க: பெட்ரோல் குண்டு வீச்சு.. திமுக பிரமுகருக்கு தொடர்பு! TTV.தினகரன்!
ஆகவே மோடி, பிரிவினைவாதத்தையும், மதவாதத்தையும் தூண்டிவிடும் செயலில் ஈடுபட்டு இருப்பதால், இந்திய தேர்தல் ஆணையம் நரேந்திரமோடியை பிரசாரம் செய்வதற்கு அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வேண்டு கோள் விடுக்கிறது.
மோடி தனது பிரிவினைவாதப் பேச்சுக்களை கைவிடவேண்டும். கைவிடா விட்டால் மோடிக்கு எதிராக சென்னையிலே தினம் தினம் கொடும்பாவி எரிப்பு போராட்டத்தை நடத்துவோம்.
எல்லா தலைவர்களும், அரசியல் அமைப்புச் சட்டத்துக்கு கட்டுப்பட்டவர்கள். அதனை மீறினால், அதற்கு உரிய தண்டனையை அவர்கள் அனுபவிக்க வேண்டும். மோடியின் பிரசாரத்தை தேர்தல் ஆணையம் தடை செய்ய வேண்டும்.
2ஆம் கட்ட தேர்தலில் மட்டுமல்ல 7கட்ட தேர்தலிலும் மோடி தோல்வியை தழுவுவார். வடமாநிலங்களில் அவருக்கு எதிரான அலை வீசுவதால் இப்போது மதவாதத்தை கையில் எடுத்திருக்கிறார். இதனைக் கண்டித்து தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் போராட்டம் நடத்தப்படும்.
இதையும் படிங்க: கென்யாவில் கொட்டித் தீர்க்கும் கனமழை.. 38 பேர் பலி!
இந்தியாவில் நரேந்திரமோடி தலைமையில் பாசிச ஆட்சி நடைபெற்று கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையத்துக்கு வாய்ப்பூட்டு போடப்பட்டிருக்கிறது.
பா.ஜ.க வேட்பாளரின் 4 கோடி ரூபாய் பிடிபட்டிருக்கிறது. அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, சிபிஐ எல்லாம் தூங்கிக் கொண்டிருக்கிறது.
ஜனநாயகத்துக்கு விரோதமான ஆட்சியை இந்தியா முழுவதும் அகற்ற வேண்டும். இந்த தேர்தல் இந்திய தேசத்தை மீட்டெடுக்கும் தேர்தல் என்று இந்திய மக்கள் முடிவு செய்து விட்டார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.