தமிழகத்தில் நிலவும் கடும் வெப்பம்காரணமாக முதியவர்கள் மூவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் ஓட்டுப்போடச் சென்ற 77 வயது சின்னப்பொண்ணு 65 வயது பழனிசாமி ஆகியோர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளனர். இதே போல திருவள்ளுவர் மாவட்டம் நெமிலி கிராமத்தை சேர்ந்த 71 வயது கனகராஜ், அங்குள்ள ஊராட்சி ஒன்றிய பள்ளி வாக்குச்சாவடியில் ஓட்டளிக்க சென்றபோது மயங்கி விழுந்து இறந்துள்ளார்.
இதையும் படிங்க: தமிழகத்தின் இரு நகரங்களில் சதமடித்த வெயில்! – வானிலை ஆய்வு கொடுத்த அலர்ட்
தேர்தல் ஆணைய உத்தரவுப்படி 85வயதுக்கு மேற்பட்ட முதியோர் மாற்றுத்திறனாளிகள் தபால் ஓட்டு அளிக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனாலும் அதுகுறித்த போதுமான விழிப்புணர்வு இல்லாததால், முதியவர்கள் வெயிலில் வாக்குச்சாவடிக்கு வாக்களிக்க வந்துள்ளனர். கடும் வெப்பம் நிலவிய நிலவும் நிலையில் வெப்ப அலை தாக்கத்தால் முதியவர்கள் மூவரும் உயிரிழந்தனரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதனிடையே கடும் வெப்பம் நிலவும் இந்த நேரத்தில், முதியோர்கள் பகல் 11 மணியில் இருந்து பிற்பகல் 3 மணி வரை வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும், ஓ.ஆர்.எஸ். குடிநீரையும், தண்ணீரையும் அவ்வப்போது முதியவர்களும் மற்றவர்களும் அருந்த வேண்டும் என்றும், மக்கள் நல்வாழ்வுத்துறை அதிகாரிகள் கூறியுள்ளனர்.