தமிழகத்தில் நிலவும் உயர்வெப்பம் மற்றும் வறட்சி காரணமாக இலட்சக் கணக்கில் தென்னைமரங்கள் அழியும் அபாயத்தில் உள்ள நிலையில் அரசு என்ன செய்யபோகிறது என்னும் கேள்வி எழுந்துள்ளது.
தமிழகத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, கிணத்துக்கடவு, உடுமலை, கோவை, திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களிலும் தென்னை விவசாயம் நடைபெற்று வருகிறது.
ஒரு தென்னை மரத்துக்கு நாளொன்றுக்கு 40 லிட்டர் தண்ணீர் தேவைப்படுவதாகக் கூறப்படுகிறது.
ஆனால் தற்போது நிலவும் கோடை வறட்சி காரணமாக தண்ணீர் கிடைக்காமல் தென்னை மரங்கள் கருகி வருகின்றன.
கிட்டத்தட்ட தமிழகம் முழுவதும் உள்ள இரண்டரை கோடி தென்னை மரங்கள் வறட்சியாலும், உயர் வெப்பத்தாலும் பாதிப்பை சந்தித்து வருகிறது.
இவற்றில் 50 சதவீதம் மரங்கள் நீரின்றி கருகி அழியும் அபாயத்தில் உள்ளது.
இதனால், லாரித் தண்ணீரை விலைக்கு வாங்கி மரங்களுக்கு ஊற்றுவதாக விவசாயிகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
ஒரு லாரி நீர் முன்பு 1200 ரூபாய்க்கு இருந்தது .
தற்போது 1800 ரூபாயாக அதிகரித்துள்ளதால், விலை கொடுத்து வாங்கி தண்ணீர் விட முடியாமல் விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: வறட்சியால் கருகும் தென்னை மரங்கள் – இழப்பீடு வழங்க அன்புமணி வலியுறுத்தல்..!!
இதன் காரணமாக போதிய நீர் இன்றி, பல வருடங்களாகப் பாடுபட்டு வளர்த்த தென்னை மரங்கள் கருகி வருகின்றன.
இவற்றை காண சகிக்காமல் விவசாயிகளே அவற்றை வெட்டிப் போடும் அவலமும் தொடங்கி உள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கு முன்பு வரை இப்படி வெட்டப்படும் ஒரு தென்னை மரத்தின் விலை ரூ.2500ஆக இருந்தது.
ஆனால் தற்போது வெட்டப்படுவதில் ஒரு மரத்துக்கு ரூ.1000 மட்டுமே கிடைப்பதாகவும் சோகம் தெரிவிக்கிறார்கள் விவசாயிகள்.
அவர்களே, நாட்டுரக தென்னைமரங்களாவது சற்று வலிமையுடன் உள்ளது.
ஒட்டுரக தென்னைமரங்கள் பலவீனமாக உள்ளதால்,எந்த வியாபாரியும்,அதை வாங்க முன்வருவதில்லை என்கிறார்கள்.
இதே போன்று தென்னைமரத்தை வாங்கும் வியாபாரிகள் தாப்பிலும் அதிருப்தி நிலவுகிறது.
ஒரு தென்னை மரத்தில் இருந்து 1டன் மரக்கட்டைகள் கிடைக்கும் நிலையில் தற்போது தென்னை மரங்கள்கூட 1 டன் எடையை எட்டவில்லை என்கிறார்கள் அவர்கள்.
இதையும் படிங்க: அந்த மனசுதான் சார் கடவுள்… எப்படி பாலா இதெல்லாம்?
இதனால் 2 மாதங்களுக்கு முன்பு ஒருடன் தென்னை மரக்கட்டை ரூ.3ஆயிரம் வரை விலை நிர்ணயிக்கப்பட்டதாகவும், தற்போது பாதிக்குப் பாதியாக குறைந்து விட்டதாகவும் கூறுகிறார்கள் அவர்கள்.
“கடந்த 88 வருடங்களில் தற்போதைய வறட்சி மற்றும் உயர்வெப்பத்தை பார்த்ததில்லை.
தமிழகத்தில் பயிரிடப்பட்டுள்ள தென்னை மரங்களை காப்பது எப்படி?’’ என்று தவித்து வருவதாகவும் தென்னை மரம் வளர்ப்போர் சங்கத்தில் இருந்து குமுறல் குரல் கிளம்பி இருக்கிறது.
ஏப்ரலில் ஓரளவாவது மழை பெய்யும் சூழலில், இந்த முறை துளியும் மழையில்லாததால், தென்னை மரங்கள் நீரின்றி கருகுகிறது.
மழைநீரின்றி தென்னை மரங்களை காக்க முடியாது’’ என்று நிலைமையை விளக்கி இருக்கிறார் தமிழக வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் கீதாலட்சுமி.
பருவநிலை மாற்றத்தால் கோடையில் முன்கூட்டியே உயர்வெப்பம் அதிகரித்துள்ள நிலையில், தமிழகத்தின் 90 முக்கிய நீர்த்தேங்களில் 10ல் ஒரு சொட்டு தண்ணீர் கூட இல்லை என்கிறார் சமூக ஆர்வலர் மருத்துவர் புகழேந்தி.
விவசாயிகளைன் வேதனையை உணர்ந்து பருவநிலை மாற்றம் காரணமாக ஏற்படும் உயர்வெப்ப அளவை கட்டுப்படுத்தவும்,
நீர் பிரச்சனை ஏற்பட் காரணமானவைகளை திறமையாக எதிர்க்கொள்ளும் திறனை தமிழக அரசு வளர்த்துக் கொள்ளவும் மருத்துவர் புகழேந்தி வலியுறுத்தி உள்ளார்.