கட்சி மேலிடம் கொடுக்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன் என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
டெல்லி குடியரசுத் தலைவர் மாளிகையில் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழா பிரமாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் 3-வது முறையாக பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார்.
அவருடன் 30 கேபினட் அமைச்சர்கள், 5 தனி பொறுப்பு இணை அமைச்சர்கள் 36 இணை அமைச்சர்கள் என 72 அமைச்சர்கள் பொறுப்பேற்றுக் கொண்டனர்.
இந்த பதவியேற்பு விழா நிகழ்ச்சியில்மாலத்தீவு அதிபர் முகமது முய்சு, நேபாள பிரதமர் புஷ்ப கமால் தாஹல் பிரச்சந்தா, இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே, மொரிஷியஸ் பிரதமர் பிரவிந்த் குமார் ஜுகனாத், பூட்டான் பிரதமர் ஷெரிங் டாக்பே,
வங்கதேச அதிபர் ஷேக் ஹசீனா, செசல்ஸ் துணை அதிபர் அகமது ஆஃபீஃப் ஆகிய வெளிநாட்டுத் தலைவர்கள், தேசிய ஜனநாயக கூட்டணிக் கட்சித் தலைவர்கள், பாஜக தலைவர்கள், பல்துறை பிரபலங்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டர்.
இதையும் படிங்க: மத்திய அமைச்சராக பதவியேற்கவில்லை – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அண்ணாமலை..!!
அந்த வகையில் தமிழகத்தில் இருந்து, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், சரத்குமார், நடிகர் ரஜினிகாந்த் அவரது மனைவி லதா ரஜினிகாந்த் ,தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை , தமிழிசை உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
மேலும் ,பிரதமர் மோடி இன்று 3-வது முறையாக பிரதமராக பதிவியேற்க உள்ள நிலையில் ( annamalai BJP ) மத்திய அமைச்சரவையில் அண்ணாமலை இடம்பெறுகிறார் என்ற தகவலுக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மறுப்பு தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சி மேலிடம் கொடுக்கும் பொறுப்பை ஏற்று பணி செய்வேன். மேலும் தமிழ்நாடும் முக்கியம் அனைத்து இடங்களுக்கும் முக்கியம் என தெரிவித்தார். மேலும் மத்திய அமைச்சரவையில் தமிழ் நாட்டிறக்கு இடம் உண்டு எனவும் தெரிவித்தார்.
மேலும் மத்திய அமைச்சரவையில், தங்களுக்கு இடம் அளிக்காதது குறித்த செய்தியாளர் கேள்விக்கு,” தமிழ்நாட்டில் இருந்து என்னை வெளியே அனுப்புவதில் ஏன் குறியாக இருக்கிறீர்கள் என்று தெரிவித்தார்.