மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியில் இருந்து தேவகவுடாவின் பேரன் பிரஜ்வால் ரேவண்ணாவை கட்சியின் செயற்குழு இடைநீக்கம் செய்து முடிவு எடுத்துள்ளது.

பிரஜ்வால் ரேவண்ணா, பெண்களை பாலியல் வன்கொடுமை செய்ததாக எழுந்த குற்றச்சாட்டு மற்றும் ஆபாச வீடியோ சர்ச்சையைத் தொடர்ந்து அவர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மூத்தமகன் ரேவண்ணாவின் மகன் பிரஜ்வால் ரேவண்ணா.
ஹசன் தொகுதி எம்.பியான அவர் தற்போது மீது தற்போது பாலியல் சர்ச்சை வெடித்துள்ளது.
300க்கும் மேற்பட்ட பெண்களை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் இது தொடர்பான 3ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலியல் வீடியோக்கள் இருப்பதாகவும் சர்ச்சை வெடித்தது.

அவர் மீது காவல்நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் இந்தியாவில் இருந்து தப்பி ஓடிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில் அவர் மீது கட்சி ரீதியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்ப்புக்குரல் கிளம்பியது.
இதையடுத்து மத சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் செயற்குழு கூட்டம், கட்சி தலைவரும், பிரஜ்வாலின் சித்தப்பாவுமான குமாரசாமி தலைமையில் இன்று கூடியது.

கூட்டத்தில் பிரஜ்வாலை கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்து முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
பிரஜ்வாலின் தந்தையான ரேவண்ணா மீதும் ஆபாச வீடியோ சர்ச்சை எழுந்துள்ள நிலையில் அவர் மீது கட்சியில் இருந்து எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
‘இதையும் படிங்க: ‘மே 2ஆம் தேதி வரை மோசமான வெப்ப அலை வீசக்கூடும்..”