சென்னையில், பிரபல ரவுடியை அவரது மனைவியின் முதல்கணவன் கூட்டாளிகளுடன் வெட்டி படுகொலை செய்த நிகழ்வு பதைபதைப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை சைதாப்பேட்டை ஸ்ரீராம்பேட் தெருவைச் சேர்ந்தவர் கௌதம் (27). சரித்திரப் பதிவேடு குற்றவாளியான இவர் மீது கொலை உள்பட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. ரவுடியான கௌதமை, புதன்கிழமை இரவு அவரது விட்டருகே 6 பேர் கொண்ட கும்பல் கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் வெட்டி சாய்த்தது. வீட்டில் இருந்தவரை, வீடு புகுந்து மனைவி மற்றும் குழந்தைகள் கண்முன்னே கொலை செய்துவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது.
இந்த பதைபதைக்க வைக்கும் படுகொலை தொடர்பாக கௌதமின் மனைவி பிரியா, சைதாப்பேட்டை போலீசுக்கு தகவல் தெரிவித்துள்ளார். சம்பவ இடம் வந்த போலீசார், ரத்தவெள்ளத்தில் சரிந்து கிடந்த கௌதமின் உடலைக் கைப்பற்றி ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு உடற்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இதனைத் தொடர்ந்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டனர். அப்போது, பிரியா, கௌதமின் இரண்டாவது மனைவி என்பது தெரியவந்தது. அவரது முதல் கணவன் ராஜ்கிரணுக்கும், கௌதமுக்கும் ஏற்கனவே பகை இருந்து வந்ததான் தொடர்ச்சியாக இந்த கொலை நிகழ்ந்திருக்கலாம் என்று போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.
இந்த நிலையில் கௌதம் கொலை வழக்கு தொடர்பாக, பிரதீப் சுரேஷ், ராஜாபாய் ஆகியோர் சரண் அடைந்தனர். அவர்கள் சைதாப்பேட்டை காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள ராஜ்கிரண், சுகுமார், மணி ஆகியோரை சைதாப்பேட்டை போலீசார் தேடி வருகின்றனர்.
இதையும் படிங்க: திருப்பதி போற பிளான் இருக்கா?அப்போ இதை பாருங்க.. – முக்கிய அறிவிப்பு!