Site icon ITamilTv

முருகனுக்கு இவ்வளவு சிறப்பா..!! யாரும் அறிந்திடாத ருசிகர தகவல்கள்…

Spread the love

தமிழ் முதற்கடவுளான முருகன் பெற்ற அப்பனுக்கு பாடம் புகட்டியவன், தமிழ் வளர்த்த அகத்தியருக்கு தமிழ்ச் சொல்லிக் கொடுத்தவன். குறிஞ்சி நிலத் தலைவன் குகன் என்றும் இந்து கடவுள்களான சிவனுக்கும் பார்வதிக்கும் இரண்டாம் மகனாக பிறந்தவர் தான் முருகன்.மேலும் இவரது சிறப்புகளை கீழே பார்போம். 

அக்கினி, இந்திரன், வருணன், பிரகஸ்பதி, ஹிரண்ய கர்ப்பம் ஆகியோரின் கூட்டுக் கலவையே முருகன் ஆவான். முருகனின் கையில் உள்ள வேல் இறைவனின் ஞானசக்தி எனப் பெயர் பெறும்.

செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் அதிகாலையில் குளித்து முடித்துத் தூய்மையுடன் ஸ்ரீ ஸ்ரீசுப்பிரமண்ய அஷ்டகம் ஓத வேண்டும் இதனால் தோஷம் விலகி நன்மை உண்டாகும்.

முருகன் சிறிது காலம் நான்முகனுக்குப் பதில் படைப்புத் தொழிலையும் செய்திருக்கிறார் இதனை உணர்த்தும் வகையில் திண்டுக்கல்லில் இருந்து ஏழு மைல் தூரத்தில் உள்ள சின்னாளப்பட்டியில் நான்கு தலையுள்ள முருகன் ஆலயம் அமைந்துள்ளது .

முருகப்பெருமான் போர் புரிந்து அசுரர்களை அழித்த இடம் மூன்றாகும் அவைகளில் சூரபத்மனை வதம் செய்தது-திருச்செந்தூர், 2 தாரகாசுரனை வதம் செய்தது- திருப்பரங்குன்றம், 3 இந்த இருவரின் சகோதரனான சிங்க முகாசுரனை வதம் செய்தது போரூர் ஆகும்.


Spread the love
Exit mobile version