பூமியின் அனைத்துப் பெருங்கடல்களையும் விடப் மிகப்பெரிய தண்ணீரை கொண்டுள்ள ‘நீர் தேக்கம்’ விண்வெளியில் கருந்துளையைச் சுற்றி மிதப்பது கண்டறியப்பட்டுள்ளது.
பிரபஞ்சத்தில் மனிதனின் கற்பனைக்கு எட்டாத பல அதிசயங்கள் உள்ளன. அதனை கண்டறியும் மனிதனின் முயற்சிகளும் விரிவடைந்து கொண்டே செல்கிறது.
அண்ட வெளியில் உள்ள கருந்துளை, பிரபஞ்சம் உருவாக காரணமான பிக்பாங் தியரி, பூமிக்கு அடுத்தபடியாக மனிதன் வாழக்கூடிய கிரகங்கள் உள்ளதா என்பது பற்றிய ஆராய்ச்சிகள், நிலவில் தண்ணீர் உள்ளதா போன்ற ஆராய்ச்சிகள் நீண்டு கொண்டே செல்கின்றன.
அந்த வரிசையில் தற்போது கருந்துளையை சுற்றிலும் நீர்தேக்கம் போல் தண்ணீர் வளையம் உள்ளதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த நீர்த்தேக்கத்தில் பூமியில் உள்ள பெருங்கடல்களில் உள்ள தண்ணீரை விட பன்மடங்கு அதிக தண்ணீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறைந்தது 140 டிரில்லியன் மடங்கு அதில் தண்ணீரின் நிறை அதிகமாக இருப்பதாகவும் பிரபஞ்சத்தில் இதுவரை கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர்த்தேக்கம் இது என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இது விண்வெளியில் மிதக்கிறது.கால்டெக் விஞ்ஞானிகள் தலைமையிலான வானியலாளர்களின் இரண்டு குழுக்களால் இந்த கண்டுபிடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது.
இந்த நீர்நிலையானது பூமியில் இருந்து 12 பில்லியன் ஒளியாண்டுகளுக்கு அப்பால் அமைந்துள்ள குவாசர் எனப்படும் பாரிய கருந்துளையால் சூழப்பட்டிருப்பதால், தொலைநோக்கி மூலம் பார்க்கக்கூடிய வாய்ப்புகள் மிகவும் குறைவு.
குவாசர்கள் என்பது ஆக்டிவாக உள்ள விண்மீன் திரள்களின் எரியும் மையங்களாகும். மேலும் அவை அதிக அளவு வாயுவை உண்ணும் ஒரு மிகப்பெரிய கருந்துளையால் இயக்கப்படுகின்றன.
“இந்த குவாசரைச் சுற்றியுள்ள சூழல் தனித்துவமானது, அது இந்த பெரிய அளவிலான தண்ணீரை உற்பத்தி செய்கிறது” என்று நாசாவின் ஜெட் ப்ராபல்ஷன் ஆய்வகத்தின் (ஜேபிஎல்) விஞ்ஞானி மாட் பிராட்ஃபோர்ட் UNILAD கூறியுள்ளார்.
“பிரபஞ்சம் முழுவதும் மிக ஆரம்ப காலங்களில் கூட தண்ணீர் பரவியுள்ளது என்பதற்கு மற்றொரு நிரூபணம்.” என கூறப்படுகிறது.வானியலாளர்கள் APM 08279+5255 எனப்படும் ஒரு குறிப்பிட்ட குவாசரை ஆய்வு செய்த போது இந்த நீர்தேக்கத்தை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தனர்.
இது நமது சூரியனை விட 20 பில்லியன் மடங்கு பெரிய கருந்துளையைக் கொண்டுள்ளது மற்றும் ஆயிரம் டிரில்லியன் சூரியன்களைப் போல அதிக ஆற்றலை உற்பத்தி செய்யும் என்று நம்பப்படுகிறது.
ஆரம்பகால பிரபஞ்சத்தில் நீர் இருப்பது சாத்தியம் என்பதை இந்த குறிப்பிட்ட குவாசர் நிரூபித்துள்ளது. நூற்றுக்கணக்கான ஒளி ஆண்டுகள் பரவியுள்ள வாயு மண்டலத்தில் கருந்துளையைச் சுற்றி நீராவி விநியோகிக்கப்படுவதையும் இது சட்டிக்காட்டியுள்ளது.
பிரபஞ்சத்தில் நீரின் கண்டுபிடிப்பு விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தவில்லை, ஏனெனில் பால்வீதியில் மற்ற இடங்களில் தண்ணீரின் தடயங்கள் காணப்படுகின்றன. இருப்பினும், பெரும்பாலானவை பனியில் உறைந்துள்ளன.