தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்களால் இன்று தொடங்கப்பட்ட காலை உணவு திட்டத்தை வரவேற்று பார்க்த்தி உள்ளார்.பேசிய பா.ம.க நிறுவனர் எஸ்.ராமதாஸ், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்துமாறு மாநில அரசை வலியுறுத்தினார்.
மேலும் மாநகராட்சி, நகராட்சி, ஊரக மற்றும் மலைப்பகுதிகளில் உள்ள 1,545 அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 1,14, 095 தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு முதற்கட்டமாக காலை உணவு வழங்கும் திட்டத்தை ரூ.33.56 கோடி செலவில் செயல்படுத்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ராமதாஸ் வெளியிட்டு உள்ள தனது ட்விட்டர் பக்கத்தில், “அறிவைத் தேடி பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுக்கு உணவளிக்கும் இந்தத் திட்டம் ஒரு நல்ல தொடக்கம். ஐந்து வயதுக்கு மேற்பட்ட அனைத்து மாணவர்களையும் கொண்டு வருவதில் நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம், இப்போது காலை உணவுத் திட்டம் மாணவர்களைத் தக்கவைக்க உதவும். இத்திட்டம் படிப்படியாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும்.என்று தெரிவித்துள்ளார்.
1. தமிழ்நாட்டில் அரசு பள்ளி மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்திருக்கிறார். அறிவுத் தீனி தேடி வரும் மாணவச் செல்வங்களின் வயிற்றுப் பசியை போக்குவதற்கான இந்தத் திட்டம் நல்ல தொடக்கம் ஆகும்!#FreeBreakfast
— Dr S RAMADOSS (@drramadoss) September 15, 2022
மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை முன்னாள் முதலமைச்சர் மறைந்த அண்ணாவின் பிறந்தநாளான இன்று இத்திட்டத்தை மதுரையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாணவர்களுடன் அமர்ந்து சிற்றுண்டி சாப்பிடும் முதல்வர் ஸ்டாலின்
தமிழக அரசின் காலை சிற்றுண்டி திட்டம் தொடர்பான #TNBreakfast என்னும் ஹேஷ்டேக் தமிழகம் மட்டுமல்லாது தேசிய அளவிலும் ட்ரெண்ட் ஆனாது. இந்த நிலையில் இந்த திட்டத்தை பாமக நிறுவனம் ராமதாஸ் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை பாராட்டியுள்ளார்.
2. ஐந்து வயதான அனைத்து குழந்தைகளையும் பள்ளிகளுக்கு கொண்டு வருவதில் நாம் வெற்றி பெற்றிருக்கிறோம். பள்ளியில் சேர்ந்த மாணவர்களை தக்கவைத்துக் கொள்ள அவர்களின் பசியைப் போக்க வேண்டியது மிகவும் அவசியம். அதற்கு இந்தத் திட்டம் பெரிதும் உதவும்!
— Dr S RAMADOSS (@drramadoss) September 15, 2022
முதற்கட்டமாக, இத்திட்டம் மாநிலத்தில் உள்ள 1,545 அரசுப் பள்ளிகளில் செயல்படுத்தப்படும் என்றும், இத்திட்டம் மாநிலம் முழுவதும் விரிவுபடுத்தப்படும் என்றும் அரசு உறுதியளித்தது. மாணவர்களுக்கு உப்மா, கிச்சடி, பொங்கல் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்த நிலையில், உணவின் ஊட்டச்சத்து மதிப்பை அதிகரிக்க, காலை உணவில் பருப்பு வகைகளை படிப்படியாக சேர்க்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.