ஆலின் விதையொன்று தனித்து நின்று ஓசையின்றித் துளிர்விடுவதும் இலைவிடுவதும்போல சீமானின் வளர்ச்சி கவனம் பெறுகிறது என்று நாம் தமிழர் கட்சிக்கு கவி பேரரசு வைரமுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 18-வது நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் 1 ஆம் தேதிவரை ஏழு கட்டங்களாக நடந்து முடிந்தது . மேலும் நாடாளுமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 4 ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில்,பாஜக 293 இடங்களிலும் , காங்கிரஸ் – 232 இடங்களுக்கும் மற்றவை – 18 இடங்களையும் கைப்பற்றியது. ஆனால் 272 என்ற தனிப்பெரும்பான்மை கொண்ட எண்ணிக்கையை பாஜகவால் பெறமுடியவில்லை.
அந்த வகையில், தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி மொத்தம் 8.19% வாக்குகளை பெற்றுள்ளது. அதிலும் குறிப்பாக புதிய சின்னத்தில் தேர்தல் ஆணைய அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்ற நிலையில், 8.19% வாக்குகளை பெற்று அங்கீகாரம் பெற்றுள்ளது.
இந்நிலையில், மாநிலக் கட்சிகளாக அங்கீகாரம் பெற்ற நாம் தமிழர் கட்சிக்கு கவி பேரரசு வைரமுத்து வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் ட்விட்டரில், மக்களவைத் தேர்தலில்
8.19 விழுக்காடு
வாக்குகள் பெற்றுத்
தேர்தல் ஆணையத்தின்
அங்கீகாரம் பெற்ற
நாம் தமிழர் கட்சியையும்
அதன் தலைமை
ஒருங்கிணைப்பாளர்
சீமானையும் பாராட்டுகிறேன்
ஆலின் விதையொன்று
தனித்து நின்று
ஓசையின்றித் துளிர்விடுவதும்
இலைவிடுவதும்போல
சீமானின் வளர்ச்சி
கவனம் பெறுகிறது
இந்த வளர்ச்சியால்
தமிழ்நாட்டு அரசியலில்
அவரைப்
பழிப்பது குறையாது
ஆனால் இனி –
கழிப்பது இயலாது வாழ்த்துகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.