சென்னை தியாகராய நகரில் பொதுமக்கள் வசதிக்காக அமைக்கப்பட்டுள்ள ஆகாய நடைபாதையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்(Mk stalin)திறந்து வைத்தார்.
சென்னையில் உள்ள தியாகராய பகுதியில் ரூ.28 கோடியே 45 லட்சம் மதிப்பளவில் கடந்த மூன்று வருடங்களுக்கு முன்னர் ஆகாய நடை மேம்பாலம் அமைக்கும் பணியானது ஆரம்பிக்கப்பட்டன.
கொரோனா நேரங்களில் இப்பணியானது சற்று தாமதித்திருந்தன. ஆனாலும் கடந்த ஓராண்டின்போது இப்பணிகள் தொடர்ந்து துரிதமாக நடைபெற்றது. தற்போது இப்பணிகள் அனைத்தும் முடிவு பெற்றுள்ளன.
இப்பாலத்தின் நீளம் 570 மீட்டர் ஆகும். மற்றும் அகலம் 4 மீட்டர் அளவிற்கும் அமைக்கப்பட்டிருக்கிறது.தியாகராய நகர் பேருந்து நிலையம் – மாம்பலம் ரயில் நிலையம் இடையே பொதுமக்கள் செல்ல லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகளுடன் இந்த நடைபாதை அமைக்கப்பட்டுள்ளது