குறிக்கோள்களை கவனத்தில் கொண்டு செயலாற்றுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் முக ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை தலைமைச் செயலகத்தில் 13 மாவட்ட ஆட்சித் தலைவர்களுடன் முதலவர் முக ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். இக்கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு, சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது கூட்டத்தில் பேசிய அவர்,” அடுத்த 2 ஆண்டுகள் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், மேம்பாட்டுக்கும் முக்கியமான ஆண்டுகள். நலப்பணிகளை சிறப்பாகச் செய்ய வேண்டிய கடமை நமக்கு உள்ளது
வருவாய்த் துறையில் பட்டா மாறுதல், சான்றிதழ்களைப் பெறுவதில் தனிக்கவனம் செலுத்த வேண்டும்.தமிழ்ப்புதல்வன், காலை உணவுத் திட்டம் ஆகிய திட்டங்களை கவனமாக கண்காணிக்க வேண்டும்.
போதைப் பொருள் நடமாட்டத்தை பெருமளவில் கட்டுப்படுத்தியிருந்தாலும், அது போதாது.போதைப் பொருள் நடமாட்டம் என்பது சட்டம், ஒழுங்கு மட்டுமல்லாது சமூகப் பிரச்னையும் கூட. இதனை முற்றிலும் ஒழிக்க வேண்டும்
சட்டம் ஒழுங்கு பராமரிப்பு, சமூக நலத்திட்ட செயலாக்கம், கட்டமைப்பு மேம்பாடு, வேலைவாய்ப்பு, அரசு சேவைகள் மக்களுக்கு கிடைப்பது ஆகியவற்றில் கவனம் செலுத்துவது அவசியம் என தெரிவித்தார்.
மேலும் மேலும் மக்கள் போற்றும் மூன்றாண்டு கால திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் மேலும் செம்மையாக நடைமுறைப்படுத்துவதும் குறிக்கோள்களை கவனத்தில் கொண்டு செயலாற்றுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களை முதலமைச்சர் அவர்கள் அறிவுறுத்தினார்.