தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஓய்வு எடுக்க குடும்பத்தோடு கொடைக்கானல் புறப்பட்டுச் சென்றார்.
நாடாளுமன்ற தேர்தல் காரணமாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்ட தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின், கடந்த சில நாட்களாக திமுகவினர் மற்றும் கூட்டணி கட்சியினர் உட்பட தேர்தலில் பணியாற்றியவர்களை சந்தித்து நன்றி தெரிவித்தார்.
இந்நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஓய்வு எடுப்பதற்காக தனது குடும்பத்தோடு 5 நாள் பயணமாக
கொடைக்கானலுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கு நிதியும் இல்லை; நீதியும் இல்லை – முதல்வர் ஸ்டாலின்
இந்த பயணத்தில், முதல்வர் ஸ்டாலின். அவரின் மனைவி துர்கா ஸ்டாலின் உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்கள் செல்ல உள்ளனர். அந்த வகையில் இன்று சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானத்தில் மதுரைக்கு புறப்பட்டனர்.
மேலும் ,மே 3-ம் தேதி வெள்ளிக்கிழமை வரை அங்கு ஓய்வுவெடுக்கும் அவர்கள், மே 4-ம் தேதி சனிக்கிழமையே மீண்டும் சென்னை திரும்ப உள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது.
முதலமைச்சரின் வருகையை அடுத்து திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் பூங்கொடி இ.ஆ.ப., மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரதீப் இ.கா.ப., ஆகியோர் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து மாற்றம் தொடர்பாக இன்று கொடைக்கானலில் ஆய்வு மேற்கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடதக்கது.