விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள பட்டாசு ஆலையில் நேரிட்ட வெடி விபத்தில் தொழிலாளர்கள் 4 பேர் உயிரிழந்த நிலையில் ஆலை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பந்துவார்பட்டியில் சகாதேவன் என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலையில் இன்று காலை ரசாயன மூலப்பொருட்கள் கலவை செய்யும் இடத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது.
இந்த பட்டாசு ஆலையில் பணியில் இருந்த 4 ஆண் தொழிலாளர்கள் உடல் சிதறி பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த வெடி விபத்தில் அடுத்தடுத்து இருந்த பட்டாசு தயாரிப்பு அறைகளும் சேதமாகின. இதையடுத்து சம்பவ இடத்திற்குவிரைந்து சென்ற தீயணைப்பு துறையினர் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் ஆலை உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஏற்கனவே கடந்த மாதம் 9 ஆம் தேதி சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது 4 பேர் உயிரிழந்த சம்பவம் விழுப்புர மாவட்டத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.