இண்டர்நெட் இல்லாமல் புளூடூத் மூலம் புகைப்படங்களை ஷேரிங் செய்து கொள்ளும் வசதியை வாட்ஸ் அப் செயலியும் அறிமுகப்படுத்த உள்ளது.
பயனாளர்களின் வசதிக்காக, புதுப்புது சேவைகளைக் கொண்டு வருவதில் வாட்ஸ் அப் என்றுமே தனித்துவமானது என்று பயனாளர்களிடம் பெயர் எடுத்து வருகிறது.
பல்வேறு புதுப்புது வசதிகளை வாட்ஸ் அப் வெளியிட்டுக் கொண்டுதான் இருக்கிறது. ஆனால் அதனை பெரும்பாலானோர் கண்டு கொள்வதில்லை.
அதில் ஒரு புதிய வசதியாக, இணையவசதி இல்லையென்றாலும் அதாவது ஆஃப் லைனில் இருந்தாலும் வாட்ஸ்ஆப் வழியாக புகைப்படங்களை அனுப்பும் வசதி விரைவில் வரவிருக்கிறதாம்.
ப்ளூடூத் வழியாக, அருகில் இருக்கும் டிவைசஸை ஸ்கேன் செய்வதன் மூலம் புகைப்படங்களை அனுப்ப அனுமதி அளிக்கும் வகையில் புதிய வசதி கொண்டு வரப்பட உள்ளதாம்.
ஏற்கனவே ஷேர் செயலிகள் மூலம் படங்களை மாற்றிக் கொள்ளும் நிலையில் வாட்ஸ் அப்பிலும் அதே முறையில் முதற்கட்டமாக புகைப்படங்களை பரிமாறிக் கொள்ளலாம் என்று வாட்ஸ் அப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
புகைப்படம் மட்டுமின்றி விரைவில் வீடியோ, இசை, ஆவணங்கள், கோப்புகள் என எதையும் பகிரும் வகையிலும் இது மேம்படுத்தப்பட உள்ளதாம்.
இதையும் படிங்க: தனுஷை கிழித்தெடுத்த பிரபலம்.. உனக்கெல்லாம் எதுக்கு இத்தனை பெண்களோட சகவாசம்?
இரு தரப்பினர் மட்டுமே இந்த வசதியைப் பயன்படுத்தி பகிர்ந்துகொள்ளும் வகையிலும், இதில் எந்த பாதுகாப்புக் குறைபாடும் ஏற்படாத வகையிலும் புதிய திட்டம் உருவாக்கப்படுகிறதாம்.
அருகிலிருக்கும் செல்போன்களுக்கு மட்டுமே பகிரக்கூடிய இந்த வசதியை வேண்டுமென்றால் மட்டும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் வாட்ஸ் அப் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ‘அம்பேத்கர் சிலை மீது பெட்ரோல் குண்டு வீச்சு..”கொதித்தெழுந்த திருமா!