கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை தீர்த்துக்கட்டிய சம்பவத்தில் மனைவி மற்றும் ரவுடியை கைது செய்த போலீசார், நண்பரான அதிமுக பஞ்சாயத்து தலைவரை தேடி வருகின்றனர்.
மே 2ஆம் தேதி நாமக்கல் மாவட்டம் ஆயிபாளையம் ரெயில்வே தண்டவாளம் அருகே மர்ம நபர் ஒருவர் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டு கிடந்துள்ளார்.
இதுகுறித்த தகவலில் வெண்ணாந்தூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தைக் கைப்பற்றினர். மேலும் அங்கு வந்த கை ரேகை நிபுணர்கள் தடயங்களை சேகரித்தனர்.
மோப்பநாய் வரவழைக்கப்பட்டு அது சடலம் கிடந்த இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடிச்சென்று நின்று விட்டது. யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து சடலத்தை உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்த போலீசார் அது யார் என்று விசாரணையில் ஈடுபட்டனர்.
அப்போது கொலை செய்யப்பட்டவர் வெண்ணந்தூர் அருகே உள்ள நெ.3 கொமாரபாளையம் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி பழனிவேல் ((வயது 46) என்பது தெரியவந்தது.
பழனிவேலுக்கு செல்வி (வயது 36) என்ற மனைவியும், 17 வயதில் மகனும் உள்ளனர்.
இதையும் படிங்க: செந்தில் பாலாஜியின் ஜாமின் வழக்கு : மே 15க்கு ஒத்திவைத்த உச்சநீதிமன்றம்!
கணவரின் கொலை குறித்த விசாரணையின்போது செல்வியின் நடவடிக்கையில் போலீசாருக்கு சந்தேகம் எழவே, அவரது செல்போனை ஆய்வு செய்தனர்.
அப்போது கொமாரபாளையம் ஊராட்சிமன்ற தலைவரான அதிமுகவை சேர்ந்த கந்தசாமி என்பவருடன் செல்வி அடிக்கடி பேசியது தெரியவந்தது.
இதனைத் தொடர்ந்து போலீசார் செல்வியிடம் நடத்திய கிடுக்கிப்பிடி விசாரணையில், மனைவியின் கள்ளக்காதல் விவகாரத்தில் பழனிவேல் கொலையானது தெரியவந்தது.
பழனிவேலுக்கும் மனிவி செல்விக்கும் அவ்வப்போது குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது.
அவர்களுக்கு இடையேயான பிரச்சனையை, பழனிவேலின் நண்பரும், ஊராட்சிமன்ற தலைவருமான கந்தசாமி நேரில் வந்து பேசி சமரசம் செய்துள்ளார்.
அடிக்கடி பழனிவேலின் வீட்டுக்கு கந்தசாமி வந்து சென்ற நிலையில் ஒருகட்டத்தில் கந்தசாமிக்கும், செல்விக்கும் இடையே தகாத உறவு ஏற்பட்டு இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இவர்களின் ரகசிய உறவு பழனிவேலுக்கு தெரியவரவே அவர் மனைவியை கண்டித்துள்ளார். இதனால், கடுப்பான செல்வி, கள்ளக்காதலன் கந்தசாமியிடம் சொல்லி, கணவருக்கு முடிவு கட்ட முடிவு செய்திருக்கிறார்கள்.
அப்போது கந்தசாமிக்கு, சேலத்தை சேர்ந்த கூலிப்படை ரவி என்பவருடன் பழக்கம் ஏற்படவே, அவரை வைத்து பழனிவேலுவின் கதையை முடிக்க திட்டமிட்டுள்ளனர்.
அதன்பேரில் 2ஆம் தேதி, ஆயிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே பழனிவேலை கந்தசாமி அழைத்துச் செல்ல அங்கு வைத்து ரவியின் கத்தியால் குத்தி கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து தகாத உறவுக்காக கணவனைகொலை செய்த செல்வி, கூலிப்படை ரவி ஆகிய இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்து சேலம் சிறையில் அடைத்தனர்.
மேலும் தலைமறைவாக உள்ள ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியை தேடி வருகின்றனர்.
திருமண பந்தத்தை மீறிய தகாத உறவுக்காக, கட்டிய கணவரையே கள்ளக்காதலனுடன் சேர்ந்து மனைவி தீர்த்துக்கட்டிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க: ‘சிறுசேரி – கேளம்பாக்கம்..’கைவிடப்பட்ட மெட்ரோ ரயில் திட்டம்!