Site icon ITamilTv

”விண்வெளியில் சூடான மீன் குழம்பு…” சுனிதா வில்லியம்ஸ் சொன்ன ரகசியம் !

Sunita Williams

Sunita Williams

Spread the love

வெளிவெளியில் உள்ள பூமி உள்ளிட்ட பிற கிரகங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் விண்வெளியில் சர்வதேச விண்வெளி மையத்தை அமைத்துள்ளன. இங்கு ஆய்வுகளை மேற்கொள்வதற்காக சுழற்சி முறையில் வீரர்கள் வீராங்கனைகள் அவ்வபோது விண்வெளிக்கு அனுப்பி வைக்கப்படுவது வழக்கம்.

அந்த வகையில் ஃப்ளோரிடாவில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து 2024 ஜூன் 6 ஆம் தேதி அட்லஸ் 5 ராக்கெட் மூலம் 3வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் ( Sunita Williams ) விண்வெளிக்குச் சென்றார்.

பிரபல விண்வெளி வீராங்கனை கல்பனா சாவுலாவுக்கு பின் உலகளவில் பிரபலமான பெண் விண்வெளி வீராங்கனையாக சுனிதா வில்லியம்ஸ் வலம் வருகிறார்.

அமெரிக்க கப்பல் படை விமானியான சுனிதா வில்லியம்ஸ், கடந்த 2006-ம் ஆண்டில் நாசா மூலம் முதல் முறை தனது விண்வெளி பயணத்தை மேற்கொண்டார். அதனை அடுத்து 2012-ம் ஆண்டு இரண்டாவது முறையாக விண்வெளி சென்று திரும்பினார் .

இதையும் படிங்க: 3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்..!!

இந்நிலையில் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள கென்னடி விண்வெளி மையத்திலிருந்து அட்லஸ் 5 ராக்கெட் மூலம் 3வது முறையாக சுனிதா வில்லியம்ஸ் விண்வெளிக்குச் சென்றுள்ளார் .

இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அமெரிக்க கடற்படை கேப்டன் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் நேற்று நள்ளிரவில் அட்லஸ் வி ராக்கெட் மூலம் போயிங்-ன் ஸ்டார்லைனர் விண்கலத்தில் விண்வெளி ஆய்வு மையம் புறப்பட்டனர்.

இந்த 3வது விண்வெளி பயணம் ஏற்கனவே ஒரு முறை கடைசி ஒரு சில நிமிடத்தில் ஒத்திவைக்கப்பட்ட நிலையில் தற்போது சுனிதா வில்லியம்ஸ் தனது 3வது விண்வெளிப்பயணத்தை வெற்றிகரமாக மேற்கொண்டுள்ளார்.

இதனையடுத்து 3வது முறையாக வெற்றிகரமாக சர்வதேச விண்வெளி மையத்தை சுனிதா வில்லியம்ஸ் அடைந்தார்.இந்த சூழலில் சுனிதா வில்லியம்ஸ், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு தன்னுடன் சுடச்சுட மீன் குழம்பை எடுத்துச் வந்துள்ளதாக சுவாரசியமான தகவலை பகிர்ந்துள்ளார்.

முன்னதாக இது தனது வீட்டில் இருப்பதுபோன்ற உணர்வை தரும் என கூறியுள்ள இவர், ஒரு விநாயகர் சிலையையும் தன்னுடன் எடுத்துச் சென்றுள்ளார். இவர் கடந்தமுறை சமோசாவை எடுத்துச் சென்றது குறிப்பிடத்தக்கது.


Spread the love
Exit mobile version