Site icon ITamilTv

”நட்சத்திரம் வெடித்து சிதறும் நிகழ்வு..” விஞ்ஞானிகள் சொன்ன ஆச்சரிய தகவல்!

Scientists

Scientists

Spread the love

பூமியிலிருந்து 3 ஆயிரம் ஒளி ஆண்டுகள் தொலைவில் அமைந்துள்ள டி கொரோனே பொரியாலிஸ் என்ற விண்மீன் தொகுப்பில் ஒரு நட்சத்திரம் விரைவில் வெடித்து சிதறும் என்றும், அதை இரவில் வெறும் கண்களால் பார்க்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

இது ஒளி மாசுபட்ட நகரங்களில் இருந்தும் கூட வெறும் கண்ணால் பார்க்கக்கூடிய பிரகாசமான காட்சியை உருவாக்கும் என்றும் தெரிவித்தனர்.இதுகுறித்து நாசா விஞ்ஞானி ரெபெக்கா ஹவுன்செல் கூறும்போது, இது வாழ்நாளில் ஒருமுறை நடக்கும் நிகழ்வு.

இதையும் படிங்க: 3வது முறையாக விண்வெளிக்குச் சென்ற சுனிதா வில்லியம்ஸ்..!!

இது நிறைய புதிய வானியலாளர்களை உருவாக்கும் என்று நான் நம்புகிறேன் என்றார். டி கொரோனே பொரியாலிஸ் கடைசியாக 1946-ம் ஆண்டு வெடித்தது.

அந்த வெடிப்புக்கு சுமார் ஒரு ஆண்டுக்கு முன்பு இந்த அமைப்பு திடீரென மங்கலானது. அதேபோல் கடந்த ஆண்டு டி கொரோனே பொரியாலிஸ் அமைப்பு மீண்டும் மங்கலானது. இது ஒரு புதிய வெடிப்பைக் குறிக்கிறது என்றும், அந்த வெடிப்பு செப்டம்பர் மாதம் நிகழும் என்றும் தெரிவித்துள்ளனர்.


Spread the love
Exit mobile version