காசி – கன்னியாகுமரி தமிழ் சங்கம் ரயிலில் பயணி தவறவிட்ட அரை கிலோ வெள்ளி பொருட்களை அரக்கோணம் ரயில்வே போலீசார் மீட்டு, பயணியை வரவழைத்து ஒப்படைத்தனர்.
கன்னியாகுமரியிலிருந்து காசி நோக்கி, தமிழ் சங்கம் ரயில் சென்று கொண்டிருந்தது.
இந்த விரைவு ரயிலில் முன்பதிவு பெட்டியில் பொன்ராஜ் (வயது 58) என்பவர் குடும்பத்தினரோடு பயணித்துள்ளார்.
அவர் கடலூர் ரயில்நிலையத்தில் குடும்பத்தினரோடு இறங்கிய பின்னர் பொருட்களை சரிபார்த்துள்ளார். அதற்குள் ரயில் புறப்பட்டு சென்றது.
அப்போது, அவர் வைத்திருந்த அரைகிலோ எடையுள்ள வெள்ளி பூஜைபொருட்கள் மாயமானது தெரியவந்தது.
தனது மகளின் திருமணத்துக் கொடுப்பதற்காக அவர் வெள்ளி பொருட்களை வாங்கி வந்துள்ளார்.
இதையடுத்து, வெள்ளிப் பூஜைப் பொருட்கள் மாயமானது குறித்து கடலூர் ரயில்வே போலீசாரிடம் புகார் அளித்துள்ளார்.
கடலூர் போலீசார் அளித்த தகவலின்படி, அரக்கோணத்தில் ரயில்வே போலீஸ் பெண் காவலர், பொன்ராஜ் பயணித்த முன்பதிவு பெட்டியில் சோதனையிட்டுள்ளார்.
அப்போது அங்கு வெள்ளி பூஜை பொருட்கள் அடங்கிய பார்சல் கிடப்பதைப் பார்த்து அதனைக் கைப்பற்றிவிட்டு, தகவல் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து அரக்கோணம் ரயில்வே போலீசார் பொன்ராஜுக்கு தகவல் அளித்து அவரை நேரில் வரவழைத்தனர்.
ரயில் பெட்டியில் இருந்து கைப்பற்றிய ரூ.80 ஆயிரம் மதிப்பிலான வெள்ளி பூஜை பொருட்களை அவரிடம் ஒப்படைத்தனர்.
இதையும் படிங்க: இத்தனை லட்சமா…? சமயபுரம் மாரியம்மன் கோயில் உண்டியல் காணிக்கை