காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துக்கள் அபகரிக்கப்படும் என்று மோடி பேசியதற்கு, காங்கிரஸ் ஊடகப்பிரிவு பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் பதிலடி தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் நடந்த தேர்தல் பிரசாரத்தின் போது, மத்தியில் காங்கிரஸ் ஆட்சி அமைத்தால் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு இஸ்லாமியர்களுக்கு வழங்கப்படும் என்று மத துவேஷத்துடன் பிரதமர் மோடி பேசினார்.
இதற்கு பல்வேறு அரசியல் கட்சியினரும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். “அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே இந்தியாவுக்குத் தேவை. இண்டியா கூட்டணி அரசால் மட்டுமே அதை சாத்தியப்படுத்த முடியும்” என்று காங்கிரஸ் கட்சியும் மோடியின் பிரசாரத்துக்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க; பாசிச ஆட்சி முடிவுக்கு வரும் நாள் வெகு தொலைவில் இல்லை- அண்ணாமலை!
இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் ஊடகப் பிரிவு பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு;-
மத்திய பா.ஜ.க அரசில், “நாட்டில் வசூலாகும் சரக்கு மற்றும் சேவை வரியில் (ஜிஎஸ்டி) சுமார் 64 சதவீதம் ஏழைகள், கீழ் நடுத்தர வர்க்க மக்களே செலுத்துகின்றனர்.கடந்த 10 ஆண்டுகளில் உருவாக்கப்பட்ட செல்வத்தில் சுமார் 40 சதவீதத்துக்கும் அதிகமானவை வெறும் 1 சதவீத மக்களிடம் மட்டுமே சென்றுள்ளது.
கடந்த 10 ஆண்டுகளில் நாட்டின் பெரும்பாலான பொதுச் சொத்துகள் மற்றும் வளங்கள் அனைத்து பா.ஜ.கவினரோடு நெருங்கியுள்ள ஒன்றிரெண்டு நிறுவனங்களின் கைகளுக்கு சென்றுள்ளது.
இந்த வளர்ந்து வரும் எதேச்சதிகாரம் பணவீக்கத்துக்கு வழிவகுத்துள்ளது என்று பொருளாதார வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இன்று 21 கோடீஸ்வரர்கள் இணைந்து 70 கோடி இந்தியர்களைவிட அதிகமான சொத்துகளை வைத்துள்ளனர்.
இவை குறித்து பிரதமர் மோடி ஒருபோதும் மக்களிடம் சொல்லப்போவதில்லை.
இந்தியாவுக்கு வேகமான பொருளாதார வளர்ச்சித் தேவை. இந்தியாவுக்கு பரந்த அளவிலான அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியே தேவை.
இந்தியாவுக்கு பெரிய அளவிலான சூழல் சார்ந்த நீடித்த பொருளாதார வளர்ச்சி தேவை. இதனை இண்டியா கூட்டணி அரசு மட்டுமே தர முடியும்” என்று ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
The Prime Minister will never tell you that: