நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என ( Nilgiri ) வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
சர்வதேச சுற்றுலா தளமாக உள்ள ஊட்டி மற்றும் கொடைக்கானலுக்கு கோடை வெயிலின் அதிகமாக இருப்பதாலும் மற்றும் பள்ளி விடுமுறைகள் என்பதாலும் சுற்றுலா பயணிகள் அதிகளவில் வரத்தொடங்கி உள்ளனர்.
இந்நிலையில், அதிகளவில் வாகனங்கள் சுற்றுலா பயணிகள் வருவதால் ஊட்டி மற்றும் கொடைக்கானலில் கடுமையாக போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதால் உள்ளூர் மக்கள் கூட வாகனங்கள் செல்ல முடியாமல் திணரும் நிலை உருவாகி உள்ளது.
Also Read : எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட விபத்து – குழந்தை கண்முன்னே தாய்க்கு நேர்ந்த கொடுமை..!!
இதனால் இ – பாஸ் முறையை நடைமுறைபடுத்த நீலகிரி மற்றும் திண்டுக்கல் ஆட்சியர்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். இந்த இ-பாஸ் முறை மே 7-ம் தேதியில் இருந்து ஜூன் 30-ம் தேதி வரை நடைமுறை படுத்தப்படுகிறது.
இந்நிலையில் நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை என வட்டார போக்குவரத்து அலுவலர் சார்பில் தகவல் வெளியாகி உள்ளது.
நீலகிரி மாவட்ட பதிவு எண் (TN43) கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை. ( Nilgiri ) வெளி மாவட்ட வாகனங்களை நீலகிரிக்கு மாற்றம் செய்திருப்பவர்கள், அதற்கான ஆவணங்களுடன் உதகை ஆர்.டி.ஓ. அலுவலகத்தை அணுகி இ-பாஸ் பெறலாம் என வட்டார போக்குவரத்து அலுவலர் தகவல் தகவல் வெளியாகி உள்ளது.